You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் நிதி தருவதாக கூறுவது உண்மையா?
தமிழகத்தின் பங்களிப்பை விட கூடுதல் நிதியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
2014-2023 காலகட்டத்தில் மத்திய அரசுக்கு 6.23 லட்சம் கோடி வரியாக தமிழ்நாட்டிமிருந்து கிடைத்துள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து ரூ. 6.69 லட்சம் கோடி நிதி திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திருப்பி கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு தெரிவிக்கிறது. நிதிக் குழு பகிர்வின் மூலம் 2.88 லட்சம் கோடியும், மானியங்களாக 2.58 லட்சம் கோடியும் வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான வட்டியில்லாக் கடனாக 6,412 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
நிதி ஆணையம் மூலம் தமிழகத்துக்கு 7-8% கிடைத்து வந்த நிலையில், புதிய விதிகள் படி தற்போது 4% மட்டுமே கிடைக்கிறது. இது மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுவதால், சில மாநிலங்களுக்கு 10-15% கிடைக்கிறது. அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை 1970களில் திறம்பட அமல்படுத்திய தமிழகத்துக்கு விதிக்கப்படும் தண்டனை போல் இது உள்ளது என தமிழகம் கூறி வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)