You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சனாதனம் என்றால் என்ன ? மத்திய இந்து கல்லூரி ஆய்வுகள் சொல்வது என்ன ?
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ் நாடு விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா- இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனமும்,” என்றார்.
மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியவை தற்போது தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் பேசியதற்கு மறுநாளான சனிக்கிழமையன்று (செப்டம்பர் 2), பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளியை பகிர்ந்து, சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், சனாதன தர்மத்தின் பொருள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள பிபிசி சார்பில் வைசப் பேரவைத் தலைவர் கலையரசி நடராஜன், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கிழக்கு பதிப்பகம் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மற்றும் தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோரிடம் பேசினோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்