கேரளா: பைக்கில் சென்று பெண்ணின் நகையை பறித்த கும்பல் - சிசிடிவி காட்சிகள்

காணொளிக் குறிப்பு, கேரளா நெய்யாற்றின்கரையில் பைக்கில் வந்த கும்பல், பெண்ணின் நகையை திருடிச் சென்றது.
கேரளா: பைக்கில் சென்று பெண்ணின் நகையை பறித்த கும்பல் - சிசிடிவி காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரையில் பைக்கில் வந்த கும்பல், பெண்ணின் நகையை திருடிச் சென்றது.

நெய்யாற்றின்கரை சாலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. லிஜி என்பவரது நகையை திருடியுள்ளனர். லிஜியும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். லிஜி ஸ்கூட்டரை சாலையில் நிறுத்தி வலதுபுறம் திரும்ப முயன்றார்.

அப்போது பின்னால் பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர்கள் லிஜியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தனர். திருடர்களை தடுக்க முயன்ற போது லிஜி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த லிஜி படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்த விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)