நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து பிடிஆர் நீக்கப்பட்டதன் பின்னணி - காணொளி
நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து பிடிஆர் நீக்கப்பட்டதன் பின்னணி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை நிதித் துறையிலிருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது ஒரு பின்னடைவுதான் என்றாலும், மிகப் பெரிய சர்ச்சைக்குப் பிறகும் அமைச்சரவையில் நீடிக்கிறார் என்பதே குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கும்.

பட மூலாதாரம், TN DIPR
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



