பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு உரை: புதிய அறிவிப்பு உள்ளதா?

நரேந்திர மோதி , பிரதமர், நாட்டு மக்களுக்கு உரை

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். நவராத்திரி தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக மோதியின் உரை இடம்பெற்றது.

பிரதமர் பேசியது என்ன?

  • நாளை முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் நாள் முதல் சுயசார்பு பாரதத்தை நோக்கி நாடு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது.
  • அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர் திருத்தங்கள் நாளை முதல் அமல்படுத்தப்படுகின்றன
  • இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்தும், வணிகத்தை எளிமைப்படுத்தும், முதலீட்டை ஈர்க்கும். வளர்ச்சிக்கான வேகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பங்களிப்பை வழங்கும்.
  • நாம் என்ன பொருட்களை வாங்கினாலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இது இந்திய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
  • சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
  • நாளை முதல் உங்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் மேலும் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க முடியும். இது நமது நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும்.
  • இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும், வணிகத்தை எளிமையாக்கும், முதலீட்டை அதிகரிக்கும்
  • கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் இப்போது நியோ-நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து நாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
  • காலம் மாற, மாற நாடும் மாற்றத்தை காண வேண்டும். அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் அவசியம். நமது நாட்டின் எதிர்கால தேவைகள் மற்றும் கனவுகளை கருத்தில் கொண்டுதான் இந்த ஜிஎஸ்டி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

மேட் இன் இந்தியா

  • நிறைய பொருட்கள் நமது அன்றாக வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டன. நமது சட்டைப்பையில் இருக்கும் சீப்பு இந்தியாவில் தயாரானதா, வெளிநாட்டைச் சேர்ந்ததா என்பது நமக்கு தெரிவதில்லை. இதில் இருந்து நாம் மீண்டு வரவேண்டு
  • நமது நாட்டு இளைஞர்களின் கடின உழைப்பில் தயாராகும் இந்திய பொருட்களையே நாம் வாங்க வேண்டும். இது நமது நாட்டு மகன், மகள்களின் வியர்வை. அனைத்து வீடுகளும் சுதேசியின் (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்) அடையாளமாக மாற வேண்டும்.
  • நான் இந்திய பொருட்களை வாங்குகிறேன் என பொருமையுடன் சொல்லுங்கள். நான் இந்திய பொருட்களை விற்கிறேன் என பெருமையுடன் சொல்லுங்கள். இது ஒவ்வொரு இந்தியரின் இயல்பாக மாறவேண்டும். இது நடந்தால் இந்தியா வேகமாக முன்னேறும்
  • இந்த தற்சார்பு இந்தியா, சுதேசி பிரசாரங்களின், உங்கள் மாநிலங்களில் உற்பத்தியை துரிதப்படுத்துங்கள். முதலீட்டிற்கான சூழலை உருவாக்குங்கள் என அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

தனது உரையின் முடிவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பும் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் பல பொருட்களின் விலையும் நாளை முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது இந்தியர்களை அதிகளவில் பாதிக்கக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா-அமெரிக்கா உறவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிற சூழலுக்கு மத்தியிலும் மோதியின் உரை கவனம் பெற்றது.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு