என்.எல்.சி விவகாரம் சர்ச்சையாவது ஏன்? உண்மை நிலவரம் என்ன?
என்.எல்.சி விவகாரம் சர்ச்சையாவது ஏன்? உண்மை நிலவரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நேரத்தில் கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயா மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.
விஜயாவை போல பல கிரமமக்கள் நெய்வேலி லிக்லைட் கார்பொரேஷன் இந்தியா லிமிடெட் -- என்எல்சி என்று அறியப்படும் மத்திய அரசின் நிறுவனம், நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கொடுக்க மறுக்கிறார்கள்.

நெய்வேலி கிராமங்களில் போராட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.
என்எல்சி புதிதாக நிலம் எடுப்பதற்கு பதிலாக ஏற்கனவே சுரங்க பணிகள் முடிந்த நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பிதரவேண்டும் என்றும் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி செய்வதை குறைக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதாக கூறுகிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அருள்செல்வம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



