You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1992ல் அதிகாரிகள் தாக்கிய வாச்சாத்தி: வல்லுறவுக்கு ஆளான 18 பழங்குடி பெண்கள் எப்படி உள்ளார்கள்?
1992ம் ஆண்டு ஒரு சந்தன மரக் கடத்தல் புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி என்ற பழங்குடி சிற்றூரில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது நடந்த சிறு மோதலை அடுத்து, வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பல நூறுபேர் பட்டப்பகலில் அரசு வாகனங்களில் வாச்சாத்திக்கு சென்று அந்த ஊரையே சூறையாடினர்.
18 இளம் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர் என்றும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் தாக்கப்பட்டனர் என்றும், ஏராளமான வீடுகள் இடித்து நாசமாக்கப்பட்டன என்றும் குற்றம்சாட்டப்பட்டது. 269 அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. 19 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் முடிவில் 215 பேருக்கு தண்டனை அறிவித்தது நீதிமன்றம்.
இந்த வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது துணிச்சலோடு கேள்வி கேட்கும் பெண்களாக மாறியுள்ளனர்.
இந்த வழக்கின் ஆரம்பப்புள்ளி 1992ல் இருந்து தொடங்குகிறது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில்,1992ல் ஜூன் 20ம்தேதி, சந்தனமரகடத்தல் தொடர்பான விசாரணை நடந்தது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை,காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இங்குள்ள பழங்குடி மக்களை தாக்கி, கிராமத்தை சூறையாடி, 18 பெண்களை பாலியல்வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்குதான் வாச்சாத்தி வழக்கு.
இந்த வழக்கில் 2011ல் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டை உலுக்கியது. இந்திய அளவில் நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் தண்டனை பெற்ற வழக்கு இது. சென்னை உயர்நீதிமன்றம் வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது.
தயாரிப்பு - பிரமிளா கிருஷ்ணன்
ஒளிப்பதிவு - மதன்
படத்தொகுப்பு - ஜெரின்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்