காணொளி: போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் எழுதிய வாசகம்
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை தொடங்கி வைத்தார்.
முன்னதாக 'Sports-ஐ எடு... Drugs-ஐ விடு...' என எழுதி முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
அதனை தொடர்ந்து போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், அண்ணா சதுக்கம் முதல் டிஜிபி அலுவலகம் வரையிலான ஓட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இது குறித்து முதலமைச்சர் X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார், அதில்
"போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்" என பதிவிட்டு இருந்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



