You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு அதிபர் இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கிறாரா? என்ன கூறினார்?
சீன சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு மாலத்தீவு திரும்பிய அந்நாட்டு அதிபர் முகமது முய்சு, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது ஆதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது," என்று குறிப்பிட்டார்.
தனது பேட்டியில் இந்தியாவை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், மாலத்தீவு- இந்தியா இடையே ராஜ்ஜீய உறவில் பதற்றம் நிலவும் சூழலில், அவர் இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளது, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சீனாவிற்கு மேற்கொண்ட 5 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாலத்தீவு திரும்பிய அந்நாட்டு அதிபர் முகமது முய்சு, வெலானா சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இந்திய பெருங்கடலில் மாலத்தீவு மிகச் சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளோம். இந்திய பெருங்கடலில் இத்தகைய சிறப்பைப் பெற்ற நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தியப் பெருங்கடல் குறிப்பிட்ட எந்தவொரு நாட்டிற்கும் சொந்தம் கிடையாது. அது பெருங்கடலைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் சொந்தமானது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)