You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல்வர் பேசும்போது பாதியிலேயே வெளியேறிய ஆளுநர் ரவி - என்ன நடந்தது?
சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே பாதியில் ஆளுநர் வெளியேறினார். முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பேரவை முடிவு பெறுவதற்கு முன்பே, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று என முதல்வர் குறிப்பிட்டார். "பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது," என்ற வரியை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்ற உரையிலிருந்து புறக்கணித்தது விவாதப் பொருளாகி இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்