கஞ்சாவை பொழுதுபோக்கு மகிழ்ச்சிக்கு தடை செய்ய தாய்லாந்து திட்டம்
கஞ்சாவை பொழுதுபோக்கு மகிழ்ச்சிக்கு தடை செய்ய தாய்லாந்து திட்டம்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த 2022இல் கஞ்சாவை சட்ட விரோத பட்டியலில் இருந்து தாய்லாந்து நீக்கியது. இதனால் சுமார் 20,000 கடைகள் திடீரென முளைத்தன.ஆனால் தற்போது பொதுழுபோக்கு மகிழ்ச்சிக்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதை தடை செய்ய தாய்லாந்து அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆய்வுகளின் படி, 20 வயதிற்கு குறைவானவர்கள் கஞ்சா பயன்படுத்துவது 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஆசியாவிலேயே இதுதான் மிகப்பெரிய கஞ்சா பண்ணை. இந்த சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8,275 கோடி ரூபாய்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தடையை அமல்படுத்த அரசு முனைப்பு காட்டுகிறது. ஆனால் பெரு நிறுவனங்கள் பெரிதாக கவலைப்படவில்லை
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



