கனமழைக்குப் பிறகு சென்னை அத்திப்பட்டு பகுதியின் தற்போதைய நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
கனமழைக்குப் பிறகு சென்னை அத்திப்பட்டு பகுதியின் தற்போதைய நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது
சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 30கி.மீ., தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த அத்திப்பட்டு புதுநகர் பகுதி.
அனல்மின் நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல பிரம்மாண்டமான தொழிற்சாலைகள் சூழ அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, மழைக்காலம் என்றாலே நெருக்கடி மிகுந்த காலம்தான்.
பெரிதும் தினக்கூலி தொழிலாளர்கள் வசிக்கும் இப்பகுதியில் சற்றே பெரிய மழை பெய்தால் போதும். இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும்.
சமீபத்தில் பெய்த கனமழையில் இந்த பகுதியின் நிலை என்ன?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



