You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டு மாடியில் மீன் வளர்த்து லாபம் ஈட்டும் பெண்கள் - காணொளி
தெலங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தில் சுய உதவிக்குழு பெண்கள் தங்கள் வீட்டு மாடியிலேயே மீன்களை வளர்த்து லாபம் ஈட்டி வருகின்றனர்.
தங்கள் விவசாய நிலத்திலும் வீட்டு மொட்டை மாடியிலும் இதற்கெனவே பிரத்யேக குளம் அமைத்து இவர்கள் மீனை வளர்க்கின்றனர். சுயநிதி குழுக்களுக்கான உதவிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி ஆணையம் செய்துவருகிறது.
மீன்களை வளர்க்க பயன்படுத்தப்படும் தண்ணீர் பின்னர் விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது இதேபோன்று 54 மீன் வளர்ப்பு இடங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்குள் மேலும் 200 இடங்களில் மீன் வளர்ப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்