மக்கள் நீதி மய்யம்: ஒரு தொகுதியில் கூட போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய முடிவு ஏன்? - காணொளி
எங்கிருந்து நல்லது கிடைத்தாலும் அதை பெற்றுக்கொள்வோம். எந்த ஒரு பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விட மாட்டோம் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை அறிமுகப்படுத்தி மதுரையில் கமல்ஹாசன் பேசிய வார்த்தைகள் இவை.
தற்போது 2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அவர் இடம் பெற்றிருக்கிறார். 2025ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்குவது என இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கட்சி தொடங்கி ஓராண்டிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், 2024 ஆம் ஆண்டுக்காக மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்வது என முடிவெடுத்திருப்பது ஏன்?
கட்சியை பலப்படுத்த கமல் தவறிவிட்டாரா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.
மேலும் விவரங்கள் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



