You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் நமாஸ் செய்த இஸ்லாமியர்களை உதைத்த காவலர் - நடந்தது என்ன?
சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் வழியாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அதில் டெல்லி இந்திரலோக் பகுதியில் நமாஸ் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காலால் எட்டி உதைப்பதும், கடுமையாக தாக்குவதும் பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கூடி அந்த காவலரை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதே போல் இந்த சம்பவத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் அங்குள்ள மெட்ரோ ரயில்நிலையம் அருகே கூடிய மக்கள் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அந்த காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)