ஆதரவற்ற பெண்ணுக்கு மாவட்ட நிர்வாகமே மாப்பிள்ளை தேடி மணமுடித்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

காணொளிக் குறிப்பு, ரோதக் நகரை சேர்ந்த கரிஷ்மாவுக்கு அந்த மாவட்ட நிர்வாகமே திருமணம் செய்து வைத்துள்ளது.
ஆதரவற்ற பெண்ணுக்கு மாவட்ட நிர்வாகமே மாப்பிள்ளை தேடி மணமுடித்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது

ஹரியானாவின் ரோதக் நகரைச் சேர்ந்த கரிஷ்மாவுக்கு அந்த மாவட்ட நிர்வாகமே முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ளது.

ஆதரவற்ற பெண்ணான இவர் 2 வயதில் இருந்து ரோதக் ஆதரவற்றோர் இல்லத்தில்தான் வளர்த்துள்ளார். அங்கேயே 12ஆம் வகுப்பு வரை முடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் நல ஆணையம், சிஎஸ்ஆர் அமைப்பு இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளன.

இதற்காக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து, நேர்காணல் நடத்தி மணமகன் தேர்வு செய்யப்பட்டது. கரிஷ்மாவை திருமணம் செய்துள்ள நிக்கு ஜூலியா ஒரு மொபைல் டவர் அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணி புரிகிறார்.

இவர்களது திருமணத்திற்கு மாவட்ட துணை ஆணையர், மாநில குழந்தைகள் நல ஆணையத்தின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகளும் வந்திருந்தனர். திருமணத்திற்கான அனைத்து சடங்குகளுடனும் நடந்த இந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)