இலங்கைக்கு இந்தியா பரிசளித்த குட்டி விமானம் - சிறப்புகள் என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியா இலங்கைக்கு வழங்கிய டோனியர் 228 விமானத்தின் சிறப்புகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான 'டோனியர் 228' ரக விமானம் இன்று இலங்கையை வந்தடைந்தது. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானமே இவ்வாறு இன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இவ்வாறான மூன்று விமானங்கள் கையளிக்கப்படவுள்ளதுடன், அதில் முதலாவது விமானமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: