நிரந்தர நாடில்லாமல் தவிக்கும் கோட்டபய ராஜபக்ஷ: தாய்லாந்துக்கு செல்லத் திட்டமா?

காணொளிக் குறிப்பு, நிரந்திர நாடில்லாமல் தவிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஜுலை மாதம் 13ம் தேதி மாலத்தீவு நோக்கி பயணித்திருந்தார். மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் நோக்கி பயணித்த அவர், அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸவின் விஸாவை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தரமாக செல்வதற்கு நாடொன்று இல்லாமல், சிங்கப்பூரில் தங்கியிருந்ததுடன், தற்போது தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: