You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வாய்ஸ் டீன்ஸ்' பிரனிர்ஷா: "தென்னிந்தியாவில் வாய்ப்பு கிடைத்தால்...”
இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பதுளை மாவட்டம், பண்டாரவளை நகரில் வசிக்கும் 13 வயதான சிறுமி தியாகராஜா பிரனிர்ஷா.
இலங்கையில் பிரபல தனியார் சிங்கள தொலைக்காட்சி சேவையான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'வாய்ஸ் டீன்' இசை நிகழ்ச்சி போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
சுமார் 6 மாத காலமாக நடைபெற்ற இந்த போட்டியில், நூற்றுக்கணக்கான சிங்கள சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ், சிங்களம், இந்தி என மூன்று மொழிகளிலும் பாடும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. எங்கிருந்து தொடங்கியது இது? எப்படி வென்றார் இவர்? சிங்களம் கற்றுக்கொண்டது எப்படி என எல்லா கேள்விகளுக்கும் விடை இந்த வீடியோவில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்