You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: அரசுக்கு எதிராக 50-ஆவது நாளாகத் தொடரும் மக்கள் போராட்டம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருக்கும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடங்கி இன்றோடு 50 நாட்கள் ஆகின்றன. இதை முன்னிட்டு பெருந்திரளாக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கருப்பு ஆடைகளை அணிந்து, கருப்புக் கொடிகளை ஏந்திக் கொண்டு பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
கொழும்புவில் காலிமுகத்திடலை நோக்கி இந்தப் பேரணி நடைபெற்றது.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், மின்வெட்டுகள் தொடங்கிய காலப்பகுதியில் தான் மார்ச் 31-ஆம் தேதியன்று இரவு வேளையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அதே நேரத்திலேயே தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மக்கள் முன்னெடுத்து வந்தனர்.
அதற்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் கொழும்பு காலிமுகத்திடலில் நீண்ட ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்