You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் பதற்றம் - சஜித் பிரேமதாச மீது தாக்குதல்
இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எஸ்ஜேபி எம்.பி.க்கள் குழுவுடன் காலி முகத்திடலுக்குள் நுழைந்தபோது அவரை நோக்கி சிலர் கட்டை, தண்ணீர் பாட்டில்களை வீசினார்கள். பின்னர் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
அப்போது, 'இலங்கை அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஜனநாயகம், சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதை பிரார்த்தனையாக கொண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அரசுடன் தொடர்புடைய வெறி பிடித்த, தீவிரவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான, வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு, உரிய கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.", என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்