You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: "வேலையாட்களுக்கு நானே உணவளிக்கிறேன்" - பெண் ஆடை உற்பத்தியாளர்
இலங்கையில் ஆடை உற்பத்தியாளராக இருக்கும் ஃபாஸ்மியா ஃபரீத், டாலர் நெருக்கடி, மின் வெட்டு போன்ற பிரச்னைகளால் தொழில் செய்யவே பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறார்.
முன்னர் 30,000 ஆடைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தவர், தற்போது அதில் பாதியளவே உற்பத்தி செய்ய முடிவதாகக் கூறுகிறார். அதற்கு மிக முக்கியக் காரணம் மின் உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை.
ஓர் உற்பத்தியாளராக விலையையும் கூட்ட முடியாமல், உற்பத்தியையும் அதிகரிக்க முடியாமல் போராடி வருகிறார்.
தொழிலாளர்களும் விலைவாசி உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதால், தினமும் காலை மற்றும் மதிய உணவு வழங்கி, கடுமையான நெருக்கடிக்கு நடுவிலும் தனது ஊழியர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
தயாரிப்பு: எம். மணிகண்டன்
படத் தொகுப்பு:நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்