ராஜபக்ஷ வீட்டின் மீது ஏறிய மாணவர்கள் - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீதான அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரபூர்வ இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறியதால் சுமார் ஒருமணி நேரம் வரை அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையும், காவல்துறையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்குள்ள சூழலை விவரிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்