விரல்களால் எழுத்துக்களை வாசிக்கும் ஆஷிப்: பார்வையற்ற மாணவரின் கல்விச் சாதனை
பிரசுரிக்கப்பட்டது
பார்வையில்லாதவர்களின் உலகம் இருள் மயமானது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் அதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அவ்வாறானதொரு உலகில், தனது அறிவாற்றல் மூலம் விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார் - இலங்கையின் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள 'றியாழுல் ஜன்னாஹ்' பாடசாலையில் கற்கும் பார்வையற்ற மாணவன் ஏ.ஆர். ஆஷிப்.
இலங்கை நாடளவில் நடைபெற்ற - ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று சாதனை படைத்ததன் மூலம், அவர் அவதானிக்கப்பட்டுள்ளார், அவரின் உலகம் வெளிச்சமடையத் தொடங்கியுள்ளது.
தயாரிப்பு: மப்றூக், நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்