மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தினத்தில் இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் கோட்டாபய

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாளை (திங்கட்கிழமை) அதிபராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு தலைவர்கள் யாரும் பங்கேற்காத நிலையில், நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் உள்ளூர் தலைவர்கள் யார் யார் பங்கேற்க இருக்கிறார்கள என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.
"இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும், அதன் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என்று தனது ட்விட்டர் பதிவில் நரேந்திர மோதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:


























