டி20 உலகக் கோப்பை வீடியோ: விராட் கோலியின் 'போலி ஃபீல்டிங்' வங்கதேச ரசிகர்களைக் கடுப்பாக்கியது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றாலும் அவர் மீது வங்கதேச ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் கோபம் கொண்டிருக்கின்றனர்.

வங்கதேசத்துடனான போட்டியின்போது விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் எனப்படும் பேட்ஸ்மேன்களை திசை திருப்பும் உத்தியைப் பயன்படுத்தியதாகவும் இது ஐசிசி விதிகளுக்கு விரோதமானது என்றும் வங்கதேச ரசிகர்கள் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவரில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இடுப்புக்கு மேலே ஃபுல் டாசாக வந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது.

அந்தப் பந்தை விராட் கோலி சிக்சருக்கு அனுப்பியதால் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது. அது நோபால் இல்லை என அப்போதே பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்த நிலையில், அதே விவாதம் வங்கதேச போட்டிக்குப் பிறகு ட்விட்டரில் ட்ரென்டானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: