CSK vs MI ஐ.பி.எல் போட்டி: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - என்ன கூறினார் தோனி?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், அபிஜீத் ஸ்ரீவஸ்தவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில், சென்னை சூப்பர் சிங்ஸ் அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது.
ஆனால், பிளே ஆஃப் சுற்றில் இடம்பெறும் வாய்ப்பை இரு அணிகளும் இழந்துள்ளன.
இப்போட்டியின் தொடக்க ஓவரிலேயே சர்ச்சை கிளம்பியது.
போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பெளலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சென்னை அணியின் வீரர் டெவன் கான்வே முதல் ஓவரில் எல்.பி. டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆம்பியரின் இந்த முடிவை டெவன் கான்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு டி. ஆர். எஸ் தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை.
மின் கோளாறு காரணமாக இந்த தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு, சென்னை அணியில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழ தொடங்கின. இதனால் அதிருப்தியடைந்த சென்னை அணி ரசிகர்கள், பலரும் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பம் கோளாறு குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
இதுகுறித்து பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐ.பி.எல் போட்டி கிரிக்கெட் விளையாட்டில் அதிக பணம் செலவு செய்து நடத்தப்படும் போட்டி. ஆனால், இப்போட்டியில் டி. ஆர். எஸ் தொழில்நுட்பம் இல்லை. பிறகு, முதல் ஓவரிலேயே அம்பயரிங் மோசமாக இருந்தது. ஐ.பி.எல் போட்டியில் அம்பயரிங் மோசமாக உள்ளது", என்று பதிவிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்நிலையில், கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே இதுகுறித்து பேசினார். "மின் தடை ஏற்படும்போது, ஜெனரேட்டர்கள் தானாக இயங்கும். ஆனால், சில இயந்திரங்கள் மீண்டும் இயங்க சிறிது நேரம் ஆகும். அதனால், இந்த போட்டியில் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயலவில்லை. இது உலகம் முழுவதும் நடக்கும் ஒன்று. இதற்கும் பட்ஜெட்டிற்கும் சம்பந்தமில்லை."
தோனி என்ன கூறினார்?
இது குறித்து, அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகம் பேசவில்லை, ஆனால், வேக பந்து வீச்சாளர்கள் பற்றி அவர் போட்டி முடிந்த பிறகு பேசினார்.
சென்னை அணியில், முகேஷ் சவுத்ரியும் (4 ஓவர்கள், 23 ரன்கள், 3 விக்கெட்கள்), சிமர்ஜீத் சிங்கும் (4 ஓவர்கள், 22 ரன்கள், 1 விக்கெட்) நன்றாக விளையாடினார்கள். இருவரும் மும்பை அணிக்கு எதிராக முதல் எட்டு ஓவர்களுக்கு பந்து வீசி, 4 விக்கெட்களை எடுத்தனர்.
இது குறித்து தோனி பேசுகையில், "வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் நன்றாக விளையாடினார்கள். இதுபோன்ற போட்டிகள் அவர்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும். அவர்களின் தன்னம்பிக்கை வளரும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
நாங்கள் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் இல்லாத கட்டத்திலும் இருந்திருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையாக விளையாட நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆறு மாத காலகட்டத்தில், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் கிடைப்பது மிகவும் அரிது.
அடுத்த சீசனில், சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் இருப்பார்கள்", என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
கடந்த 14 ஆண்டுகளில், மும்பை இந்தியன், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஓர் அணியாவது பிளே ஆஃப் சுற்றில் இடம் பெற்றுவிடும்.
ஆனால், ஐ.பி.எல் போட்டி வரலாற்றிலேயே, இந்த இரண்டு அணியும், பிளே ஆஃப் சுற்றில் இடம்பெறாதது இதுவே முதல் முறை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்