ஐபிஎல் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில், 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூத்த வீரர் ரஹானே 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தாவின் 3 விக்கெட்களை கைப்பறியதன் மூலம் மொத்தம் 170 விக்கெட்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் மலிங்காவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் பிராவோ.
ஆனால், முக்கியமான விக்கெட்களை பிராவோ வீழ்த்தியிருந்தாலும் கொல்கத்தாவின் வெற்றியை சி.எஸ்.கேவால் தடுக்க முடியவில்லை. 18வது ஓவரின் 3வது பந்தில் கேப்டன் ஷ்ரேயாஸின் பவுண்டரியுடன் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்