“ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” - விராட் கோலியின் அறிவிப்புக்கு என்ன காரணம்?

பிரசுரிக்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் அணியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

2014-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல்முறையாக வழி நடத்தினார்.

பின்னர் முதன்மையாக அந்த பதவியில் அவர் தொடர்ந்தார். கேப் டவுன் டெஸ்டில் கேப்டனாக அவர் கடைசியாக விளையாடினார். இதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது கேப்டன் பதவி விலகல் தொடர்பான கடிதத்தை பகிர்ந்துள்ளார் கோலி. இந்த விவகாரத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: