தோனியின் வருகை மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று கொண்டாடப்படுவது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலக கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி.

இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆடுகளத்துக்கு வெளியே இருந்தபடி அணியை அவர் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :