You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு ஒடிஷா உதவியது எப்படி?
இந்திய ஹாக்கி அணி போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் இருந்து வாழ்த்துப் பறக்கிறது. தொலைபேசியில் வீரர்களை அழைத்துப் பேசுகிறார். சில நேரங்களில் காணொளி வடிவில் வாழ்த்துச் சொல்கிறார். ஏன் இந்த அக்கறை, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கும், இந்திய ஹாக்கி அணிக்கும் என்ன தொடர்பு?
இந்திய ஹாக்கி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் துணை கேப்டன்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்கள். ஆனால் நவீன் பட்நாயக்கின் அக்கறைக்கு இது மட்டுமே காரணமல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஹாக்கியை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை ஒடிஷா மேற்கொண்டு வருகிறது.
மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய ஹாக்கி அணிகளுக்கும் ஒடிஷா அரசுதான் ஸ்பான்சர். 2018-ஆம் ஆண்டில் ஹாக்கி அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்பை சஹாரா நிறுவனம் நிறுத்திக் கொண்ட பிறகு, ஒடிஷா மாநில அரசு களமிறங்கியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்