200 மீட்டர் ஓட்டத்தில் அசாதாரண சாதனை படைத்த தமிழ் பெண் தனலட்சுமி

காணொளிக் குறிப்பு, 200 மீட்டர் ஓட்டத்தில் அசாதாரண சாதனை படைத்த தமிழ் பெண் தனலட்சுமி
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 14ஆம் தேசிய ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் திருச்சியிலிருந்து 20 பேர் பங்கேற்றனர். இந்த தேசிய தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சாதனை புரிந்துள்ளனர். அதன்படி பெண்கள் பிரிவில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்துள்ளார். குறிப்பாக, சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார். பிபிசி செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்தி, தனலட்சுமியுடன் நடத்திய நேர்காணலை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: