பேட்மிண்டன் உலகில் இந்தியாவுக்கு பதக்கங்களை குவிக்கும் பாருல் பர்மார்

காணொளிக் குறிப்பு, பேட்மிண்டன் உலகில் இந்தியாவுக்கு பதக்கங்களை குவிக்கும் பாருல் பர்மார்
பிரசுரிக்கப்பட்டது

பாருல் தல்சுக்பாய் பர்மார் (47) குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை. தற்போதைய மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இவர் முதல் இடத்தை வகிக்கிறார்.

2017BWF மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் உலக சாம்பியன் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பார்மர் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், மூன்று வயதாக இருந்தபோது விபத்தில் சிக்கினார். ஆனால் இந்த விளையாட்டைத் தேர்வு செய்தார். 2009 ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய அர்ஜுனா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார். தனது வாழ்க்கை அனுபவங்களை பிபிசியிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: