வெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்
ஒரே சுற்று கிரிக்கெட் பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் அறிமுகம் ஆகி தனது அபார ஆட்டத்திறனால் கிரிக்கெட் உலகை வியக்க வைத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன். 2020 ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர் திறனால் ஆஸ்திரேலிய சுற்று பயணத்தின்போது வலைபயிற்சி பந்து வீச்சுக்கு கூடுதல் வீரராக தேர்வான நடராஜன், பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். அதைத்தொடர்ந்து டி20, ஒருநாள் போட்டி என ஆகியவற்றிலும் அடுத்ததாக டெஸ்ட் தொடரிலும் தேர்வானார். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகழந்து பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அனைத்தும் வெறும் 3 மாதங்களில் இவருக்கு வாய்ப்பாகியிருப்பது வேறு எந்த வீரருக்கும் அமையாத சாதனை. விடாமல் பற்றிக் கொண்டு அவர் தக்க வைத்த வாய்ப்புகளை விவரிக்கும் காணொளி இது.
பிற செய்திகள்:
- பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசு
- வட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும்
- திறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
- Ind Vs Aus 4வது டெஸ்ட்: களமிறங்கிய தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
- “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: