You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலைகளை ஆடைபோல் தைத்து கூடும் கட்டும் தையற்கார எறும்புகள்
மரங்களில் ஏறும்போது இந்த எறும்புகளிடம் கடி வாங்கி, கை கால்களில் தடித்துப் போன, எரிச்சலூட்டுகின்ற வீக்கங்களோடு வீட்டுக்கு வந்த நினைவுகள் ஊர்ப்புறங்களில் வளர்ந்த யாருக்குத் தான் இருக்காது.
அதற்குக் காரணம், தையற்கார எறும்புகள் கடிக்கும்போது அவற்றின் வயிற்றில் சுரக்கும் ஃபார்மிக் அமிலம் என்ற அமிலத்தை, கடிக்கும் இடத்தில் உட்செலுத்துகின்றன. அந்த அமிலம் எரிச்சலை உண்டாக்கக்கூடியது.
தையற்கார எறும்புகள் மிகவும் ஆக்ரோஷமானவை. அவை வாழும் தாவரத்தில் ஊடுருவும் களைப்பூச்சிகளை உடனடியாகத் தாக்கி, அழிக்கக்கூடிய பண்பு கொண்டவை. ஆகையால், தையற்கார எறும்புகள் கூடு கட்டி வாழும் தாவரங்களில் தங்களுக்கான உணவையும் வாழ்விடத்தையும் அவை எடுத்துக் கொள்வதோடு, அந்தத் தாவரத்திற்கு களைப்பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பும் வழங்குகின்றன. அதன்மூலம் தையற்கார எறும்புகள் நம் உணவு உற்பத்திக்கும் பெரியளவில் உதவுகின்றன.
செய்தி: க. சுபகுணம்
படத்தொகுப்பு: டேனியல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்