கருப்புக் குடிநீர்: காஜல் முதல் ஸ்ருதி ஹாசன் வரை குடிக்கும் தண்ணீர்

காணொளிக் குறிப்பு, காஜல் முதல் ஸ்ருதி ஹாசன் வரை குடிக்கும் கருப்புக் குடிநீர்
பிரசுரிக்கப்பட்டது

காஜல் அகர்வால் மும்பை விமான நிலையத்தில் கையில் ஒரு புட்டி கருப்பு நிறக் குடிநீரோடு இருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

செய்தியாளர்கள் அந்தத் தண்ணீரில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது எனக் கேட்டபோது சிரித்துக்கொண்டே, "இது நல்ல குடிநீர். இதை ஒருமுறை குடித்துப் பாருங்கள், உங்களுக்கு மிகவும் பிடிக்கும்," என்று பதிலளித்தார். அதை எவ்வளவு காலமாகக் குடிக்கிறார் எனக் கேட்டதற்கு, "நீண்ட நாட்களாக" என்று பதிலளித்தார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் கூட, சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகத்தில் தானும் கருப்புக் குடிநீரைப் பருகுவதாகத் தெரிவித்தார்.

இதில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: