You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்லாமிய வெறுப்புணர்வுகளால் வெளிநாடுகளில் இந்தியா சந்திக்கும் சிக்கல்கள்
இந்தியாவில் வசிக்கும் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரிகளின் தலைவர்கள் காவி உடை உடுத்திக்கொண்டு வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசும் பேச்சுகள் கடந்த ஓர் ஆண்டில் இந்தியாவில் சுனாமி போல வெளியாகின.
அவற்றில் சில பேச்சுகள் வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் இஸ்லாமிய இனப்படுகொலை குறித்தும் குறிப்பிட்டன.
இதற்கு முந்தைய காலகட்டங்களில் இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை ஏமாற்றி மதம் மாற்றி திருமணம் செய்துகொள்கிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு “லவ் ஜிகாத்” என்ற பெயரில் இந்துத்துவ வாதிகளால் முன் வைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் இஸ்லாமிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் ஈவிரக்கமின்றி பகடி செய்யப்படுகின்றனர். போலியான இணையதளங்கள் மூலம் இஸ்லாமிய பெண்கள் விற்பனைக்கு வந்த நிகழ்வுகளும் உண்டு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்