அபோபிஸ் விண்கல்: 100 ஆண்டுகளுக்கு பிறகு புவியை நெருங்கப் போகும் ஆபத்து

பிரசுரிக்கப்பட்டது

ஒரு பெரிய விண்கல் புவியைத் தாக்கலாம் என பல ஆண்டுகளாக பயந்து கொண்டிருந்த நாம் (புவியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்), இனி நிம்மதியாக வாழலாம்.

குறைந்தபட்சம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அப்பெரிய விண்கல் புவியைத் தாக்காது என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியுள்ளது.

நாசா கடந்த 2004-ம் ஆண்டு `அபோபிஸ்` என்கிற விண்கல்லைக் கண்டுபிடித்தது. அந்த விண்கல் மிகவும் ஆபத்தானது எனக் கருதப்பட்டது.

அந்த விண்கல் 2029-ம் ஆண்டு மற்றும் 2036-ம் ஆண்டுகளில் புவியைத் தாக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அவை எல்லாமே புறந்தள்ளப்பட்டு, 2068-ம் ஆண்டு புவியைத் தாக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் தற்போது, அந்த விண்கல் தொடர்பான புதிய ஆய்வுகளின் அடிப்படையில் அக்கணிப்பையும் நிராகரித்து இருக்கிறது நாசா.

இந்த வானியல் புதிரின் நிலவரத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: