You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் ஒருவருக்கு தவறாக வருமா? ஃபால்ஸ் பாசிட்டிவ் என்றால் என்ன?
அண்மையில் கோவையில் ஒரு முதியவர் கொரோனா தொற்றால் இறந்துவிட அவர் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்த வீட்டின் வாசல் தகரத் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது.
இதன் பின்னர் அந்த வீட்டிலிருந்தவர்கள் வேறொரு இடத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த போது, அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான அந்த குடும்பம் கோவை சுகாதார அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிவிப்பு பலகை ஒன்றை தங்கள் வீட்டின் மீது தொங்கவிட்ட்து வைரலாக பரவியது.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இது போல பல சம்பவங்கள் சமீபகாலமாக அதிகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான், பிசிஆர் பரிசோதனை உண்மையிலேயே துல்லியமான முடிவுகளை அளிக்கிறதா என்பது குறித்த முக்கிய தகவலை ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர். அது குறித்து இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
காணொளி & படத்தொகுப்பு: சிவக்குமார்
வழங்குபவர்: அறவாழி இளம்பரிதி
பிற செய்திகள்:
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: