இலையை விதையாக்கி மரம் வளர்ப்பில் புரட்சி செய்யும் கோவை விவசாயி

பிரசுரிக்கப்பட்டது

இலையைப் பறித்து நட்டால் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ். ராஜரத்தினம்.

திசு வளர்ப்பு முறை (Tissue Culture) அடிப்படையில் 'இலை வழி நாற்று முறை' எனப்படும் இந்த நுட்பம் சாத்தியமாகியுள்ளது.

பொதுவாக விதைகளில் இருந்துதான் வேர் உருவாகி, செடி, மரம் ஆகியவை வளரும். இதனால் மரங்களை வளர்ப்பதற்கு அதிக விதைகள் தேவைப்படுகின்றன.

இப்போது சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான விதை ரகங்ளும் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

இதை சரிசெய்ய களம் இறங்கிய ராஜரத்தினம், இலையிலிருந்து செடியை உருவாக்கும் 'இலை வழி நாற்று முறையை அறிமுகம் செய்து வேளாண் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இலை வழி நாற்று முறையில் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே லட்சியம் என்றும், இந்த முறை எதிர்காலத்தில் மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் ராஜரத்தினம்.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: