27 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து ; ஆஸ்திரேலியா வெளியேறியது
பெர்மிங்காமில் ஆஸ்திரேலியாவை எளிதாக வென்றது இங்கிலாந்து. 224 ரன்கள் எனும் இலக்கை 33 ஓவர்களில் சேஸிங் செய்தது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுகின்றன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
முதல் முறையாக தோல்வி
1975லிருந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியே அடையாத அணி எனும் பெருமையோடு வளைய வந்த ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்துள்ளது.
1975-ல் நடந்த முதல் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோற்றது. அதற்கு பிறகு 44 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் அரை இறுதியில் மோதின. இம்முறை ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வெளியேற்றியது.
மேன் ஆஃப் தி மேட்ச்
கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டைக்கு தடை போட்டார் கிறிஸ் வோக்ஸ்.
இங்கிலாந்து வெற்றி
33-வது ஓவரின் முதல் பந்தில் இறுதிப்போட்டியில் ஆடுவதை உறுதி செய்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயான் மோர்கன் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான மேட்ச் வின்னிங் பௌண்டரியை விளாசினார்.
ஜேசன் ராய் - பேர்ஸ்டோ ஆட்டமிழந்தது இங்கிலாந்தை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.
ஜோ ரூட்டும் - இயான் மோர்கனும் எளிதாக சேஸிங்கை முடித்தனர்.
மோர்கன் 39 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.
ஜோ ரூட் 46 பந்தில் 49 ரன்கள் விளாசினார்.
ஜேசன் ராய் ஆட்டமிழப்பு
கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார் ராய்.
ஆஸ்திரேலியாவின் அப்பீலுக்கு நடுவர் அவுட் என கையை உயர்த்தினார்.
கம்மின்ஸ் வீசிய பந்து ராயின் பேட்டில் பட வில்லை என்பது ரீப்ளேயில் தெரிந்தது. ஆனால் இங்கிலாந்து ஏற்கனவே ரிவ்யூவை இழந்ததால் ராய் எதுவும் செய்ய முடியவில்லை.
20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருக்கிறது.
இங்கிலாந்து வெற்றி பெற 30 ஓவர்களில் 77 ரன்கள் எடுக்க வேண்டும்.
முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு அபார தொடக்கம் தந்த பேர்ஸ்டோ - ஜேசன் ராய் இணை பிரிந்தது.
ஸ்டார்க் வீசிய பந்தில் எல்.பி ஆனார் பேர்ஸ்டோ.
43 பந்துகளில் அவர் 33 ரன்கள் எடுத்தார்.
ராய் - பேர்ஸ்டோ இணை 124 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ஜோ ரூட் ஜேசன் ராயுடன் இணைந்துள்ளார்.
ஜேசன் ராய் அபாரமாக விளையாடி வருகிறார். 61 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
ஜேசன் ராய் - பேர்ஸ்டோ இணை தொடர்ச்சியாக நான்காவது முறையாக நூறு ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது.
ஸ்மித் வீசிய 16-வந்து ஓவரில் ராய் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார்.
அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 32 ஓவர்களில் 88 ரன்களே தேவை.
ரூட் 4 பந்துகளில் மூன்று பௌண்டரிகளை விளாசி 12 ரன்கள் எடுத்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பவர்பிளேயில் இங்கிலாந்து சிறப்பான ஆட்டம்
224 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்ற இலக்கோடு இங்கிலாந்து விளையாடி வருகிறது.
பத்து ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்திருக்கிறது இங்கிலாந்து அணி.
ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணை பதட்டமடையாமல் ஆஸி பந்துவீச்சை எதிர்கொண்டு வருகிறது.
ஜேசன் ராய் 33 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பௌண்டரிகள் உதவியோடு 27 ரன்கள் எடுத்திருக்கிறார்.
ஜானி பேர்ஸ்டோ 27 பந்துகளில் மூன்று பௌண்டரிகள் உதவியோடு 20 ரன்கள் எடுத்திருக்கிறார்.
அடில் ரஷீத் பந்தில் பேட் கம்மின்ஸ் அடித்த பந்தை சிறப்பாக கேட்ச் பிடித்து அவுட் செய்தார் ரூட்.
கம்மின்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அடில் ரஷீதுக்கு இது மூன்றாவது விக்கெட்.
ஆர்ச்சர் 10 ஓவர்களில் 32 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.
ஸ்மித் - மிச்செல் ஸ்டார்க் இணை தற்போது விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருக்கிறது.
அவுட்
கிளென் மேக்ஸ்வெல் ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் 23 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிசியிருந்த மேக்ஸ்வெல் இந்த உலகக்கோப்பையில் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலியா 35 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருக்கிறது.
5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸி
அலெக்ஸ் கரே அவுட் ஆன பிறகு மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். அவரது விக்கெட்டையும் அடில் ரஷீத் வீழ்த்தினார்.
இதையடுத்து அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஸ்மித்துடன் இணைந்துள்ளார்.
ஸ்மித் பொறுப்பாக விளையாடி அரை சதமடித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா 32 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்மித் - கரே இணை பிரிந்தது
மூன்று விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலியா தடுமாறிய பிறகு ஸ்மித் - அலெக்ஸ் கரே இணை சிற்பபாக விளையாடியது. இந்நிலையில் அடில் ரஷீத் பந்துவீச்சில் ஜேம்ஸ் வின்சியிடம் கேட்ச் கொடுத்து கரே அவுட் ஆனார்.
அலெக்ஸ் கரே 70 பந்துகளில் 4 பௌண்டரிகள் உதவியுடன் 46 ரன்கள் எடுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஒரு ஓவரில் ஒன்பது பந்துகள் வீசிய மார்க் வுட்
13-வது ஓவரை வீச மார்க் வுட்டை அழைத்தார் இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன்.
இந்த ஓவரில் 3 பந்துகளை அவர் வைடாக வீசினார்.
ஆனால் வுட் வீசிய அந்த ஓவரில் மூன்று வைடு மூலமாக இரண்டு ரன்களும் லெக் - பை மூலமாக இரண்டு ரன்களும் கிடைக்க கூடுதலாக இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.
முதல் பவர்பிளேவில் 27 ரன்கள்
3 விக்கெட் இழப்புக்கு பிறகு ஸ்டீவன் ஸ்மித் - அலெக்ஸ் கரே இணை பவர்பிளேவில் மேற்கொண்டு 13 ரன்கள் சேர்த்துள்ளது.
ஸ்மித் 25 பந்தில் 4 ரன்கள் எடுத்திருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
மூன்று விக்கெட் இழந்தது ஆஸ்திரேலியா
ஏழு ஓவர்கள் முடிவில் 15 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆஸ்திரேலியா.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஆர்ச்சர் பந்தில் எல்.பி ஆகி வெளியேறினார். அவர் டக் அவுட் ஆனார்.
வோக்ஸ் வீசிய மூன்றாவது ஓவரில் வார்னர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஹேண்ட்ஸ்கோம் ஏழாவது ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை வோக்ஸ் கைப்பற்றினார்.
இன்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித்,பீட்டர் ஹான்ஸ்கோம்ப்.மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கரே, பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜாசன் பெஹண்டார்ஃப், நாதன் லயான்
இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஹான்ஸ்கோம்ப் சேர்க்கபட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.
ஆஸ்திரேலியா அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித்,பீட்டர் ஹான்ஸ்கோம்ப்.மார்கச் ஸ்டாய்னிஸ்,க்லென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கரீ, பேட் குயுமின்ஸ், மிட்செல் ஸ்டார்க்,ஜாசன் பெஹண்டிராஃப், , நாதன் லியான்