மகாராஷ்டிராவில் 2,510 கொரோனா பாதிப்புகள் - தமிழகத்தில் இரட்டிப்பாகும் பரிசோதனைகள்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஓமிக்ரான்: மகாராஷ்டிராவில் 2,510 புதிய கொரோனா பாதிப்புகள் - தமிழகத்தில் இரட்டிப்பாகும் கொரோனா பரிசோதனை

    கொரோனா

    பட மூலாதாரம், ANI

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

    அமெரிக்கா மற்றும் பிரான்சில் புதிய பாதிப்புகள் தொடர்பாக புதிதாக பதிவு நடைமுறைகள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், ஒமிக்ரான் திரிபு பரவலின் சவாலை சமாளிப்பது எளிதானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்தியாவிலும் ஓமிக்ரான் மற்றும் கொரோனாவின் பிற வகைகளுடன் தொடர்புடைய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் நெரிசலான அரசியல் பேரணிகள் இன்னும் நடந்து வருகின்றன, இத்தகைய சூழலில் பல மாநிலங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஒமிர்கான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மிதமான கட்டுப்பாடுகளுடன் கூடிய மஞ்சள் எச்சரிக்கையை டெல்லி அரசு செவ்வாயன்று அறிவித்தது. இந்த நிலையில் இன்று சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், டெல்லியில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் நேற்றை விட இரு மடங்காக, அதாவது ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    தற்போது, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரமாக உள்ளது. இதில், 24 மணி நேரத்தில் 9,195 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

    இந்தியாவில் இதுவரை 781 ஓமிக்ரான் மாறுபாடுகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக 238 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் இந்த எண்ணிக்கை 167. மும்பையில் பாசிட்டிவிட்டி விகிதம் 4 சதவீதம் என்று மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.

    இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், பரிசோதனை எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    நூறு சதவீத ஒப்பந்தத் தடம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிகரித்து வரும் வழக்குகளுக்கு மத்தியில், டெல்லியை தளமாகக் கொண்ட பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியர் ஸ்ரீநாத் ரெட்டி பிபிசியிடம் கூறுகையில், ஓமிக்ரான் தொடர்பான பாதிப்புகள் இதுவரை தீவிர அறிகுறிகளைக் காட்டவில்லை என்பதுதான் ஒரே நிவாரணம் என்று தெரிவித்தார்.

  3. WAN-IFRA தெற்காசியா டிஜிட்டல் மீடியா விருதுகளில் 4 விருதுகளைப் பெறும் பிபிசி

    பிபிசி விருதுகள்

    WAN-IFRA தெற்காசியா டிஜிட்டல் மீடியா விருதுகளில் BBC நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது.

    இதில், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல விருதுகள் அடங்கும்.

    பிபிசியின் மராத்தி சேவையின் டெய்லி டிஜிட்டல் புல்லட்டின் டீன் கோஷ்தி, 'பார்வையாளர்களின் ஈடுபாட்டிற்கான' வெள்ளி விருதைப் பெற்றுள்ளது.

    'ஆன்லைன் வீடியோவின் சிறந்த பயன்பாடு' பிரிவில், சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளின் ஆர்ப்பாட்டத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 'எ நைட் அட் இந்தியாஸ் லார்ஜெஸ்ட் ஃபார்மர்ஸ் ப்ரோடெஸ்ட்' என்ற ஆவணப்படம் வெண்கல விருதை வென்றுள்ளது.

    இந்த ஆவணப்படத்தை பிபிசியின் இந்திய மொழிகளின் தலைவர் ரூபா ஜா தயாரித்திருந்தார். நேஹா ஷர்மா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

    பிபிசி ஹிந்தியின் பாட்காஸ்ட் விவாதம் 'சிறந்த பாட்காஸ்ட் திட்டத்தில்' வெண்கல விருதைப் பெற்றுள்ளது.

    இந்த விவாதத்தை பிபிசி நிருபர் ரெஹான் ஃபசல் வழங்கினார். அவர் வரலாற்று நிகழ்வு, ஆளுமை போன்றவற்றில் ஆழமான நிபுணத்துவத்தைக் கொண்டவர்.

    இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தாக்கம் பற்றிய பிபிசியின் செய்திகள் 'கோவிட்-19க்கான சிறந்த கவரேஜ் திட்டம்' என்ற பிரிவில் வெண்கல விருதை வென்றுள்ளது.

  4. புதுச்சேரியில் டிசம்பர் 31 இரவு மதுபானம் விற்க கட்டுப்பாடு - உயர்நீதிமன்றம் உத்தரவு, நடராஜன் சுந்தர்

    கொண்டாட்டத்திற்கு தடையில்லை. மதுபானம் விற்க தடை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை. மதுபானம் விற்க தடை

    புதுச்சேரியில் புத்தாண்டின் போது மதுபானம் விற்க கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

    புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதி. இரவு 12:30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை." என்று விளக்கமளித்தார்.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைப்பிடிக்க மாட்டார்கள். மதுபானம் விற்கப்படாமல் இருந்தாலே பல ஆபத்துகள் தவிர்க்கப்படும்," என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை. ஆனால் புத்தாண்டு நள்ளிரவு நேரத்தில் 3 மணி நேரம் மதுபானம் விற்கத் தடை விதித்தனர்.

    அதன்படி, டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் இரவு 1 மணி வரை மதுபானம் விற்கவும், பொது இடங்களில் அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் இரவு 10 முதல் 1 மணி வரை மதுபானம் விற்பனை கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  5. மழை பாதிப்புகளை சீரமைக்க நிதி - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    மழை பாதிப்பிற்கு ரூ. 6,229 கோடி தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது.
    படக்குறிப்பு, மழை பாதிப்பிற்கு ரூ. 6,229 கோடி தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீளவும் உள்கட்டமைப்பை புனரமைக்கவும் தேவையான நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குவலியுறுத்தியுள்ளார்.

    இந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையினால், ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க தற்காலிகமாக ரூ. 1, 510 கோடியும் பாலங்கள், சாலைகள், உள்கட்டமைப்புகளை சரிசெய்ய ரூ. 4, 719 கோடியும் நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விரிவான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பு மேலும் கடுமையாக்கியுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தவும்." என்று பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

    பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு நவம்பர் 21ம் தேதி தமிழ்நாட்டில் ஆய்வு செய்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. பாஜகவிற்கு திமுக பயப்படுகிறதா? - டிடிவி தினகரன் விமர்சனம்

    தமிழ்நாட்டுக்கு விருந்தினராக வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டியதில்லை என்கிற திமுகவின் நிலைப்பாட்டை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன், "திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற திமுக, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது," என்று பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. விவசாயிகள் நிதியுதவி திட்டத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி விடுவிப்பு

    விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி

    பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் (பிஎம் கிசான்) 10வது தவணையாக ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வரும் ஜனவரி 1ம் தேதி விடுவிக்கப்படுகிறது.

    இதன் மூலம், 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளும் விவசாயிகள் குடும்பத்தினரும் பயனடைவார்கள். இத்திட்டத்தின் கீழ் இது வரை 1.6 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளில் தலா ரூ. 2 ஆயிரம் என விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

  8. இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி, பிரபுராவ் ஆனந்தன்

    மீனவர்களின் விடுதலைக்கு காத்திருக்கும் குடும்பத்தினர்
    படக்குறிப்பு, மீனவர்களின் விடுதலைக்கு காத்திருக்கும் குடும்பத்தினர்

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை அழைத்துவர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விரிவான பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம் வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 68 பேரையும் மீட்க, இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் தேவையான சட்ட உதவிகளுக்கும் உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர், "68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கேள்வி எழுப்பினர்.

    தமிழ்நாடு அரசு தரப்பில், "68 மீனவர்களையும் அழைத்து வர இந்திய உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது" என்று கூறப்பட்டது.

    மத்திய அரசு தரப்பில், "மீனவர்களை இந்தியா கொண்டு வர இலங்கை வெளியுறவுத் துறையுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்," என்றனர்.

    இதையடுத்து நீதிபதிகள், "ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தை சந்திக்க துரிதமாக நடவடிக்கை எடுங்கள்" என அறிவுறுத்தினர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு தரப்பில், விரிவான பதில் மனுவை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  9. 2021இல் மட்டும் டெல்லியில் ரூ. 845 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல்

    டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில், யுகாண்டா நாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்ததாக கூறப்பட்ட பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

    யுகாண்டாவில் இருந்து பயணியாக வந்த அந்த நபர், சுமார் ஒரு கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை மாத்திரை போல் விழுங்கி, கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 14 கோடி.

    போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி விமான நிலையத்தில், நடப்பாண்டில் மட்டும் இது வரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றின் மொத்தம் மதிப்பு ரூ. 854 கோடி என்று சுங்கத்துறையை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. பெட்ரோலுக்கு ரூ. 25 சலுகை - ஜார்கண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

    ஜார்கண்ட் மாநிலத்தில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டுவோருக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022 ஜனவரி 26ம் தேதி முதல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 25 சலுகை அளிக்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. உசிலம்பட்டி - பெண் சிசு உடல் தோண்டி எடுப்பு, பிரபுராவ் ஆனந்தன்

    அதிகாரிகள் முன்னிலையில் பெண் சிசு சடலம் தோண்டி எடுப்பு
    படக்குறிப்பு, அதிகாரிகள் முன்னிலையில் பெண் சிசு சடலம் தோண்டி எடுப்பு

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதிக்கு கடந்த 21ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை கடந்த 26ஆம் தேதி உயிரிழந்தது. வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி அளித்த புகாரின் பேரில், பெண்சிசு கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்க சென்றனர். அப்போது பெற்றோர் தலைமறைவானது தெரியவந்தது.

    இந்நிலையில், மதுரை மாவட்ட காவல் கூடுதல் காவல் துணைக் காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையிலான போலீசார், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் சமூக நல அலுவலர் ஜெயா, முன்னிலையில் மருத்துவக் குழுவினர் பெண்சிசு புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர். உடலை தோண்டி எடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

    உடற்கூராய்வு முடிவில், குழந்தை உயிரிழப்பிற்கான உரிய காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  12. மதுரை மத்திய சிறையில் மோதல், கல் வீச்சு, மணிவண்ணன்

    மதுரை மத்திய சிறையில் மோதல்
    படக்குறிப்பு, சிறையில் ஏற்பட்ட மோதலில் கற்களை வீசிய சிறைவாசிகள்

    மதுரை அரசரடி அருகே உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 1, 300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர்.

    சிறையின் முதல்தள பிரிவில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக வந்த திருச்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து மதியம் உணவு இடைவேளையின் போது, சிறைவாசிகள் இரு தரப்பினரிடையே ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திய, சிலர் தங்களது உடலில் பிளேடுகளால் காயம் ஏற்படுத்திக் கொண்டனர். சிறைச்சாலை சுவர்களில் ஏறி கற்களை வீசினர்.

    சிறைத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் இரு தரப்பினரின் மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வீச்சில் ஈடுபட்ட சிறைவாசிகளை சிறைக்காவலர்கள் சிறையில் அடைத்தனர். மோதலில் காயம்பட்டவர்களுக்கு சிறைவளாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

  13. கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போதுதான் அதிகளவில் பாலியல் புகார்கள் - அமைச்சர் கீதா ஜீவன்

    கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போதுதான் அதிகமான பாலியல் புகார்கள் அளவில் வருகின்றன. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

    மதுரை கே.கே.நகரில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், தென் தமிழகத்திலுள்ள 19 மாவட்டங்களுக்கு குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த அலுவலகம் நேரடியாக இயங்கும். பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும் என்று கூறினார். பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக உள்ள சிறார் நீதி சட்டத்தின்படியே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கிராமப்புறங்களில் நடைபெறும் குழந்தைகள் திருமணம் குறித்து அறிந்தவர்கள் உடனடியாக தகவல் தர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார்.

    போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் அண்மையில் தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன என்றார்.

    அமைச்சர் கீதா ஜீவன்
  14. திண்டுக்கல் - அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு முற்றுகை

    திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.

    தங்களது பகுதியில் குடிநீர் மாதத்துக்கு ஒரு முறைதான் வருவதாகவும், கழிவு நீர் வாய்க்கால் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை குறித்து, பலமுறை திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பரமனிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் கடந்த இரண்டு வருடங்களாக ஊராட்சி தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    ஊராட்சித் தலைவரும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான கூட்டுறவு துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என்று அங்குள்ள பெண்கள் கூறினார்கள்.

    திண்டுக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல் - அமைச்சர் ஐ.பெரியசாமி  வீடு முற்றுகை
  15. சென்னை: புத்தாண்டைக் கொண்டாட எங்கெல்லாம் தடை?, ஆ. விஜயனாந்த்

    சென்னையில் சொகுசு விடுதிகளில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடைவிதித்துள்ளது.

    ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் கடைவீதிகளில் மக்கள் அலைமோதுகின்றனர்.

    இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி சென்னையில் டிசம்பர் 31 அன்று இரவு பொதுமக்கள் கூடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் விதித்துள்ளார்.

    இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், `சென்னையில் சொகுசு விடுதிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு மக்கள் கூட வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த அறிவிப்பில், ` டிசம்பர் 31 அன்று பொதுஇடங்களில் மக்கள் கூட வேண்டாம். அன்று இரவு 9 மணி முதல் மெரினா கடற்கரை, எலியட்ஸ் பீச், நீலாங்கரை, ஈ.சி.ஆர் சாலை ஆகியற்றையொட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கூட வேண்டாம்' எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மேலும், `டிசம்பர் 31 அன்று இரவு 9 மணி முதல் மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான சாலைகள் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகள் ஆகியவற்றில் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்படும்' என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

    `கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டை கொண்டாடக்கூடாது' எனவும் `பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், அரங்குகள், கிளப்புகள் ஆகியவற்றிலும் வர்த்தரீதியாக புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றிலும் மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை கொண்டாடக் கூடாது' எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், தங்கும் விடுதிகள், தங்கும் வசதியுள்ள உணவகங்கள் ஆகியவற்றில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறையின்படி இரவு 11 மணி வரையில் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணைகள், பொதுஇடங்களில் நடன, இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 31 அன்று முக்கிய சாலைகளில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    new year 2022

    பட மூலாதாரம், Getty Images

  16. பாலியல் தொல்லை வழக்கு - பெண் எஸ்.பி-யிடம் குறுக்கு விசாரணை

    விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி ஆகியோர் ஆஜராகினர்.

    இவ்வழக்கு தொடர்பாக பெண் எஸ்.பி-யிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணையை தொடங்கி ஏற்கனவே 4 நாட்கள் நடத்திய நிலையில், அந்த விசாரணை நிறைவடையாததால் 5-வது நாளாக முன்னாள் முன்னாள் டி.ஜி.பி. தரப்பு வழக்கறிஞர் விசாரணை செய்தனர்.

    பெண் எஸ்.பி-யிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் நீதிபதி கோபிநாதன் பதிவு செய்து கொண்டார்.

    இம்மனு மீது அரசு தரப்பில் பதில் தெரிவிப்பதற்காகவும், தொடர்ந்து பெண் அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணையை நிறைவு செய்வதற்காகவும் இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

    sexual harassment case
  17. கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: 28 சதவீதம் மட்டுமே தகுதி - பதிவாளர் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேர் கடன் பெற்றுள்ளனர். இவர்களில் 35,37,693 பேர் கடன் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள். கடன் பெற்றவர்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே தகுதியுடையவர்களாக உள்ளதாகவும் கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்றும் கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  18. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை

    கடலில் கால் நனைக்கும் மகிழ்வில் மாற்றுத்திறனாளி

    பட மூலாதாரம், M.K.Stalin - Twitter

    படக்குறிப்பு, கடலில் கால் நனைக்கும் மகிழ்வில் மாற்றுத்திறனாளி

    சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கடலில் கால் நனைக்கும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, மாற்றுத் திறனாளியுடன் உதயநிதி இருக்கும் படத்தைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்," என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி

    பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போவே நகரத்தில் ஒரு மசூதியின் இமாம் (மசூதியின் வழிபாட்டை தலைமை தாங்கி நடத்துபவர்) செய்த மதப் பிரசங்கம் ஜிஹாதை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. எனவே அம்மசூதியை பிரான்ஸ் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

    இம்மசூதி அடுத்த ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மசூதியில் நடந்த மதப் பிரசங்கத்தில் ஜிஹாதிகள் போராளிகள் என்றும், நாயகர்கள் என்று கூறியதாகவும், வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியதாகவும் போவே நகரின் ஒய்ஸ் பகுதியைச் சேர்ந்த ப்ரிஃபெக்ட் கூறினார்.

  20. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை 781

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.

    அதிகபட்சமாக டெல்லியில் 238, மகாராஷ்டிராவில் 167, குஜராத்தில் 73, கேரளாவில் 65, தெலங்கானாவில் 62, ராஜஸ்தானில் 46, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் தலா 34 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது வரை 241 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், தமிழ்நாட்டில் மொத்த ஒமிக்ரான் தொற்றாளார்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு