கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 2%க்கு கீழ் இருந்தால் பள்ளிகள் திறப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும். தடுப்பூசி போடாதவர்களை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆகஸ்ட் 14 நேரலை நிறைவடைகிறது
இத்துடன் சனிக்கிழமைக்கான பிபிசி தமிழின் நேரலை பக்கம் நிறைவடைகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
கர்நாடகாவில் 2%க்கும் கீழ் கொரோனா பாதிப்பு இருந்தால் பள்ளிகள் திறப்பு - முதல்வர் பசவராஜ் பொம்மை
பட மூலாதாரம், get
படக்குறிப்பு, கோப்புப்படம்
கர்நாடகாவில் 2%க்கும் கீழ் கொரோனா பாதிப்பு இருந்தால் பள்ளிகள் திறப்பு - முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம் இரண்டு சதவீதத்துக்கும் கீழ் இருந்தால் அந்த மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், விரைவில் இதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும் என்று கூறினார்.
இதில் முதல் நடவடிக்கையாக, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பூசி போடாதவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் இது தொடர்பாக முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கர்நாடகாவுக்கு தற்போது ஒவ்வொரு மாதமும் 65 லட்சம் தடுப்பூசி டோஸ் மருந்துகள் மத்திய தொகுப்பில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதை ஒரு கோடியாக அதிகரிக்க வலியுறுத்த விரைவில் டெல்லி செல்லவிருப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
டோக்யோ சென்ற இந்திய ஒலிம்பிக் குழுவினரை சந்தித்த குடியரசுத் தலைவர்
டோக்யோ ஒலிம்பிக் 2020-க்கு சென்று திரும்பிய இந்தியக் குழுவினரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையின் பண்பாட்டு மையத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் படங்களை ஏ.என்.ஐ. செய்தி முகமை பகிர்ந்திருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பட்டியல் சாதியினர் குறித்த அவதூறுப் பேச்சுக்காக கைது செய்யப்பட்ட மீரா மிதுன்
பட மூலாதாரம், Twitter
படக்குறிப்பு, மீரா மிதுன்
பட்டியல் சாதியினர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக நடிகை மீரா மிதுன் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் அவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்தபோது அவர் அழுது, கத்தி கூச்சலிட்டதாக காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. முழு செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை - எஸ்.பி.வேலுமணி
பட மூலாதாரம், S.P.Velumani
தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையின்போது 13 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வெளிவந்த செய்தியும், தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக கூறப்படுவதும் பொய்யான தகவல்கள் என தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைவர்களில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணி.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த வேலுமணி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.
"திமுக அரசால் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போடப்பட்டு, எனக்கு சம்பந்தமில்லாத இடங்களில் கூட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கோவை மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை சகோதரனாக பாவித்து தமிழகம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த கழகத் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித் திட்டங்களை பெற்றுத்தந்ததன் காரணமாக கோவை மாவட்ட மக்கள் இந்த மிகப் பெரிய அங்கீகாரத்தை எங்களுக்கு கொடுத்தனர்.
அந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்றது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.சோதனையின்போது 13 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அப்படி எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக வந்த தகவலும் தவறான தகவல்.
நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன். கடவுள் நம்பிக்கை உடையவன். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீதிபதிகளை நம்புகிறேன்.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அதிக அளவிலான கிராம சாலைகள் அமைத்துள்ளோம், ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம், 148 விருதுகள் பெற்று தந்துள்ளேன். இதுபோன்ற சாதனைகளை ஆட்சியில் இருந்தபோதும் பத்திரிக்கைகள் பெரிதாக வெளியிடவில்லை.
எந்த சூழலிலும் நாங்கள் கோவை மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அம்மா மறைந்த பின்பு ஆட்சியை பாதுகாத்ததில் நான் முக்கியமானவன். இதன் காரணமாகவே என் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது' என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் நெருக்கடி: பதவி விலகுவாரா அதிபர்?
பட மூலாதாரம், ARG Facebook page
படக்குறிப்பு, அஷ்ரஃப் கனி, ஆஃப்கானிஸ்தான் அதிபர்
ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக மாட்டார் என்பது இன்று அவர் விடுத்துள்ள செய்தியில் இருந்து தெளிவாகிறது என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.
சிதறிக்கிடக்கும் பாதுகாப்பு படையினரை ஒருங்கிணைப்பது, தாலிபன்களுக்கு எதிரான தாக்குதலை தொடருவது என்றவாறு தமது திட்டங்களை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அதிபர் அஷ்ரஃப் கனி தெளிவுபடுத்தியிருப்பதாக சிக்கந்தர் கெர்மானி தெரிவித்தார்.
எனினும், தற்போது பல நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றி வருவதைத் தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருவது அரசுக்கு ஒருவித நடுக்கத்தையே ஏற்படுத்தியிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
அச்சத்தில் பொதுமக்கள்
தற்போது தலைநகர் காபூலில் தாலிபன்களின் நடவடிக்கைகக்கு ஆதரவாக இல்லாவிட்டால்தான் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் முன்னேறிய நடவடிக்கைகள் தொடர்பாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இதே போக்கில் தாலிபன்கள் முன்னேறி வந்தால், 30 நாட்களில் தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றக்கூடும் என்று கணித்துள்ளது.
கடைசியாக நேற்று காபூலில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள லோகார் மாகாண தலைநகர் புல் இ ஆலம் என்ற நகரை தாலிபன்கள் கைப்பற்றினார்கள்.
ஆஃப்கானிஸ்தானின் இரண்டாவது நகரான கந்தஹாரை கைப்பற்றிய பிறகு அந்த நாட்டின் பாதி முக்கிய நகரங்கள் தாலிபன்கள் வசம் வந்துள்ளன.
அங்குள்ள நிலைமை கையை மீறிச் செல்வதாகவும் அங்கு மோதல் தொடர்ந்தால், அதற்கு அதிக விலையை கொடுப்பவர்கள் பொதுமக்களாகவே இருப்பர் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஷரிய சட்டம்: தாலிபன்கள் உறுதி
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தகாத உறவு கொண்டால் கல்லடி தாக்குதல், திருட்டு குற்றத்துக்கு கால்களை முடமாக்குதல், 12 வயதுக்கு பிறகு சிறுமிகள் பள்ளி செல்ல தடை உள்ளிட்ட தமது ஷரிய சட்டங்களை அமல்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக தாலிபன்களின் முன்கள தளபதிகளும் களத்தில் உள்ள வீரர்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
முடக்கப்பட்டிருந்த ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரசார் டிவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
சமீபத்தில் டெல்லியில் பாலியல் ரீதியாக துன்புறுதப்பட்ட ஒரு சிறுமியின் குடும்பத்தை சந்தித்தார் ராகுல்காந்தி. அந்த சந்திப்பின் படத்தை ராகுல் காந்தி தன் ட்விட்டரில் கணக்கில் பகிர்ந்து இருந்தார்.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காட்டக்கூடாது என்ற சட்டத்தின்கீழ் ராகுல் குறித்து ட்விட்டரில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது கணக்கு ட்விட்டரால் முடக்கப்பட்டது.
இதையடுத்து, ராகுல்காந்தி வெளியிட்ட ஒரு வீடியோ அறிக்கையில் ட்விட்டர் பக்கச்சார்புடைய தளம் என்றும், அது இந்தியாவின் அரசியல் நடைமுறையில் குறுக்கிடுகிறது என்றும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டு இருக்கிறது என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இது ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் இருந்தும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் கணக்குகளும் இன்று காலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
வேளாண் பட்ஜெட்: "இருபோக நிலங்கள் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்"
தமிழ்நாட்டில் தற்போதுள்ள இருபோக சாகுபடி நிலங்களின் பரப்பளவு 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்த அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட்: இலவச மின்சாரத்துக்கு ரூ.4,508 கோடி
விவசாயத்துக்கு இலவச மின்சாரம் அளிப்பதற்காக இந்த ஆண்டு 4,508.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
வேளாண் பட்ஜெட்: ரூ.10 கோடியில் குளிர்ப்பதனக் கிடங்குகள்
வேளாண் பட்ஜெட்: வேளாண் விளைபொருட்கள் அழுகாமல் பாதுகாக்க பண்ருட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 10 கோடி ரூபாயில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். - வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளின் நிலையை ஆராய்ந்து, சீரமைக்க 12.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் புதிதாக பத்து உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்டு 14 பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் - நரேந்திர மோதி
ஆகஸ்டு 14-ம் தேதி (இந்தியா-பாகிஸ்தான்) பிரிவினையில் நிகழ்ந்த பயங்கரங்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். "பிரிவினையின் வலிகள் மறக்கப்படமுடியாதவை. மில்லியன் கணக்கான நமது சகோதர, சகோதரிகள் இடம் பெயர்ந்தார்கள். கண்மூடித்தனமான வெறுப்பு, வன்முறை காரணமாக பலர் உயிரிழந்தார்கள். நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக ஆகஸ்ட் 14 பிரிவினை பயங்கரங்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும்" என்று அவர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு ஆணை
பட மூலாதாரம், M.K.Stalin twitter video grab
படக்குறிப்பு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை வழங்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட பலரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.இப்படி பயிற்சி பெற்றவர்களில் 24 பேர் அர்ச்சகர்களாகவும், 4 பேர் மடைப்பள்ளியிலும் நிமிக்கப்பட்டுள்ளனர்.
நேயர்களுக்கு வணக்கம்
வணக்கம் நேயர்களே..இன்று தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை நேரலையாக வழங்குகிறோம். செய்திகளை வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன் மற்றும் கௌதமன் முராரி. நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.