You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

151 கொரோனா மாதிரிகளில் 90 டெல்டா பிளஸ் திரிபு: இந்தியாவில் அதிர்ச்சி

திரிபுராவில் அனுப்பப்பட்ட 151 கொரோனா வைரஸ் மாதிரிகளில் 90 மாதிரிகள் டெல்டா பிளஸ் வகையை சேர்ந்ததாக இருந்தது கண்டுபிடிப்பு.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு

    இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக, ஜூலை 13-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை.

    இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிரேமதாச மைதானத்தில் நடக்கும். இதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கும்.

  3. ஹர்லீன் தியோலை பாராட்டிய சச்சின்

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஹர்லீன் தியோல் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், அமி ஜோன்ஸ் அடித்த பந்தைப் பிடித்த கேட்ச்சை சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

    இந்த ஆண்டின் சிறந்த கேட்ச் எனக்கு இதுதான் என்று அவர் பாராட்டியுள்ளார்.

    இங்கிலாந்தின் நார்த்தாம்ப்டன் நகரில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

  4. அயோத்தி: ஆற்றில் மூழ்கிய 12 பேரில் 6 பேர் உடல்கள் மீட்பு

    அயோத்தியில் நேற்று 12 பேர் ஆற்றில் மூழ்கிய சம்பவத்தில் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதி 3 பேரைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன.

  5. பரப்பன அக்ரஹாரா சிறையில் கஞ்சா, கத்தி, சிம் கார்டு உள்ளிட்டவை கண்டுபிடிப்பு

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று அதிகாலை முதல் நடத்தப்பட்ட சோதனையில் மொபைல் போன்கள், சிம் கார்டுகள், கஞ்சா, கத்திகள், மெமரி கார்டுகள், சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று போலீஸ் இணை ஆணையர் (குற்றம்) சந்தீப் பாட்டில் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    மோப்ப நாய் உதவியோடு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    அதைப் போலவே, பெங்களூரு மாநகரின் மேற்கு கோட்டத்தில் ரௌடிகள் வீடுகளில் அதிகாலை முதல் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

    105 வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 76 பேர் கைது செய்யப்பட்டனர் என்று ஏ.என்.ஐ. கூறுகிறது.

  6. புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    ஒடிஷா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர் இழுப்பவர்களுக்கு கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டு, நெகட்டிவ் வந்திருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், தடுப்பூசியும் போட்டிருக்கவேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படுகிறது. போலீஸ் தவிர, இந்த நிகழ்வுக்காக ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று புரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகி அறிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

  7. 151 கொரோனா மாதிரிகளில் 90 டெல்டா பிளஸ், இந்திய மாநிலத்தில் அதிர்ச்சி

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்ட 151 கொரோனா மாதிரிகளில் 90 மாதிரிகள் மிக ஆபத்தானதாக கருதப்படும் டெல்டா பிளஸ் திரிபு வகையை சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது கவலைக்குரிய விஷயம் என்று கோவிட் தொடர்பு அலுவலர் தீப் தெப்பர்மா தெரிவித்துள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் எனப்படும் மரபணு வரிசைப் படுத்தலுக்காக இந்த 151 மாதிரிகளும் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டன.

  8. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் இன்று நடக்கும் நிகழ்வுகளை நேரலையாக வழங்குகிறோம். இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.