சமீபத்திய நிலவரம் என்ன?
பிகாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியிடையே நெருக்கமான போட்டி நிலவுகிறது.
வெற்றி, முன்னிலை நிலவரத்தை கீழே உள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? அடுத்த பிகார் முதல்வர் யார்? நிதீஷ் குமார்? தேஜஸ்வி யாதவா? வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. இந்தக் கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரியலாம்.
பிகாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியிடையே நெருக்கமான போட்டி நிலவுகிறது.
வெற்றி, முன்னிலை நிலவரத்தை கீழே உள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வாக்கு எண்ணிக்கையில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்கட்சிகள் புகார் கூறுகின்றன. இது குறித்து புகார் அளிக்க தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
ஏராளமான வாக்குகளை அளித்து பிகார் மக்கள் எங்களை கௌரவப்படுத்தி இருக்கிறார்கள் என இந்திய மஜ்லிஸ் - இ-இத்திஹாதுல்முஸ்லிமீன் கட்சியில் தலைவர் அசாதுதீன்ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள அசாதுதீன்ஒவைசி இல்லத்தில் பிகார் தேர்தலில் அவரது கட்சி வென்றதை கொண்டாடும் விதமாக வெடிகள் வெடிக்கப்பட்டன.
இந்திய மஜ்லிஸ் - இ-இத்திஹாதுல்முஸ்லிமீன் கட்சி மூன்று இடங்களில் வென்றுள்ளது, இரு இடங்களில் முன்னிலையில் உள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிகாரில் கட்சியை வலுப்படுத்துவோம் என்றும்,தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உழைப்போம் என்றும் தெரிவித்தார்.
இரவு 9 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 123 இடங்களில் வென்றுள்ளன அல்லது முன்னிலை வகிக்கின்றன.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய 'மகா கட்பந்தன்' 113 இடங்களில் வென்றுள்ளது அல்லது முன்னிலை வகிக்கிறது.
பிற கட்சிகள் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
ரமேஷ் பிரசாதுக்கு, தினமும் ஏழு கிலோ உருளைக்கிழங்கால் ஆன சமோஸாக்களை விற்று, நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் லாக்டவுன் முடிந்து பல மாதங்கள் ஆகியும், ரமேஷின் கடை முன்பு போல் இல்லை.
இப்போது அவர் அதிகபட்சமாக, இரண்டு கிலோ மட்டுமே சமோஸாக்கள் செய்கிறார் அதுவும் மீந்து விடுகிறது. மக்களிடம் வாழவே பணம் இல்லை என்றால், எங்கே சமோசா வாங்க போகிறார்கள் என்று ரமேஷ் கேட்கிறார்.
லாலு பிரசாத் யாதவ், தீவிர அரசியலில் இருந்தபோது, பிகாரில் ஒரு முழக்கம் இருந்தது - அது, சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை, பிகாரில் லாலு இருப்பார் என்பதுதான்.
ஆனால், இப்போது லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார். அது சமோசா விற்பனையாளர்களை விரக்தி அடையச் செய்திருக்கிறது.
பிகார் தேர்தல் முன்னிலை விபரத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் காணும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்
1995ஆம் ஆண்டு, பிகார் சட்டமன்றத் தேர்தலில் லாலு யாதவும், நிதீஷ் குமாரும் பிரிந்தனர். 1990ஆவது ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காணப்பட்ட ,உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக பின்தங்கிய சாதிகளை அணி திரட்டும் செயலானது, நிதீஷ் மற்றும் லாலு பிரிந்ததன் காரணமாக உடைந்து விட்டதுபோல தெரிந்தது.
பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் அவர்களுடன் ஒரு உரையாடல்
பிகார் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கத்தைவிட கூடுதல் நேரம் ஆவதற்கு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதே காரணம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு முழுமையான முடிவுகள் வெளியாகும் என்றும் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக விலகலைக் கடைபிடிப்பதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரே சமயத்தில், வழக்கத்துக்கும் குறைவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள எண்ணப்படுவது, அதிகமான தபால் வாக்குகள் ஆகியவையே முடிவுகள் வெளியாவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிகார் சட்டமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வென்ற அகில இந்தியமஜ்லிஸ்- இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியில் தலைவர் அசாதுதீன் ஒவைசி இன்று இரவு 9 மணிக்கு ஊடகர்களை சந்திக்கிறார்.
தேஜஸ்வி யாதவிடம் கடுமை காட்டி, 70 இடங்களை வாங்கிப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களில் முன்னிலையும், வெற்றியும் (1 வெற்றி, 19 முன்னிலை) பெற்றுள்ளது. காங்கிரசுக்கு இவ்வளவு இடங்கள் தந்ததே ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணமா என்று பலரும் தற்போது விவாதிக்கிறார்கள்.
இதே போல 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அழுத்தங்கள் தந்து 63 இடங்களை வாங்கிய காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் திமுகவின் வெற்றி சதவீதமும் குறைவுதான்.
ஆனால், 2016 தேர்தலில் மீண்டும் அதே போல் திமுக கூட்டணியில் அழுத்தம் தந்து 41 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், ஆளும் அதிமுகவுக்கு எதிரான அலைக்கு மத்தியிலும் அதில் 8 இடங்களையே வென்றது. 178 இடங்களில் போட்டியிட்ட திமுக 89 இடங்களை வென்றிருந்தாலும், காங்கிரசால் அதே விகிதத்தில் தங்கள் தொகுதியில் வெற்றியை ஈட்ட முடியாத நிலையில் திமுக-வால் ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவையான எண்ணை எட்டிப் பிடிக்க முடியாமல் போனது.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 8 இடங்களுக்கு அதிகாரபூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜக 2 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 இடங்களும், காங்கிரஸ் ஒரு இடமும் வென்றுள்ளன. பாஜக - ஜேடியூ கூட்டணிக் கட்சியான விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. தேர்தல் ஆணைய தளத்தில் உள்ள வெற்றி, முன்னிலை நிலவரம்:
பிகாரில் சட்டமன்றத் தேர்தலோடு வால்மீகிநகர் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடந்தது.
இத்தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் சுனில் குமார் முன்னிலை வகிக்கிறார். காங்கிரசின் பிரவேஷ் குமார் மிஷ்ரா பின்தங்குகிறார்.
இத் தொகுதியின் ஐக்கிய ஜனதா தள எம்.பி. வைத்தியநாத் பிரசாத் மகாதோ இறந்ததை அடுத்து இந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கிறது.
பிகாரில் இதுவரை ஒன்றிரண்டு இடங்களில்தான் முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்னும் முன்னிலை நிலவரம்தான் வந்தபடி உள்ளது. இதில் பாஜக - நிதிஷ் கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களில் வெற்றியும், முன்னிலையும் பெற்றுள்ளன. முடிவு தெரியாத தொகுதிகளில் 19 இடங்களில் முன்னிலையில் உள்ள வேட்பாளருக்கும், அடுத்து உள்ளவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 1000க்கும் குறைவாகத்தான் உள்ளது என்று பத்திரிகையாளர் சுகுமார் ரங்கநாதன் ட்வீட் செய்துள்ளார். அந்த 19ல் 13 இடங்களில் பாஜக - நிதீஷ் கூட்டணி முன்னிலை வகிப்பதாகவும் அவர் தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல் முதலாக ஒரு தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்பங்கா (ஊரகம்) தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லலித் குமார் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ஃபராஸ் ஃபாத்மியை சுமார் 2,200 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
இன்னும் 242 தொகுதிகளுக்கு முடிவுகள் அலுவலப்பூர்வமாக வெளியாகவில்லை.