"மின் கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்"- இ.பி.எஸ்
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றத்தை செய்துள்ளதாக தமிழ்நாடு மின் வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிரசாந்த் முத்துராமன்
நன்றி நேயர்களே
இன்றைய நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய செய்தித் துளிகள் இதோ...
- கள்ளக்குறிச்சியில் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு பரிசோதனை நிறைவடைந்த நிலையில் அதன் அறிக்கை நீதிமன்றத்தில் ஜூலை 21ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றத்தை கண்டித்துதமிழகம் முழுவதும் வரும் ஜூலை 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்.
- நபிகள் நாயகம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி நூபுர் ஷர்மா தாக்க்ல செய்த மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
- இலங்கை ஜனாதிபதியின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
- இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
- அதிமுகவின் சட்டமன்ற புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளதாகவும் அதிமுகவின் கழக துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சமூக வலைதளம் மூலம் அவதூறு பரப்பிய மாணவர் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக காஞ்சிபுரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தை முன்னெடுப்போம் என பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வளைதளங்களில் பதிவு செய்ததால் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வளைதலங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா வில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்கின்ற இளைஞர் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
“எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றும் விவகாரத்தில் ஒருதலை பட்சம் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”- சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பின்னர் செய்தியாறர்களை சந்தித்தார் அவர் பேசுகையில் “அதிமுக கொறாடா வேலுமணி என்னை சந்திக்க வேண்டும் என சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் நான் நெல்லை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததால் பின்னர் தொலைபேசியில் பேசுவதாக தெரிவித்தேன்.
அதிமுக கொறடா வேலுமணி கடிதம் ஒன்றை எனது உதவியாளரிடம் கொடுத்து சென்றுள்ளார். நான் இதுவரை அந்த கடிதத்தை படித்துப் பார்க்கவில்லை. கடந்த வாரம் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எனக்கு ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது.
எதிர்க்கட்சி கொறாடா வேலுமணி கொடுத்த கடிதத்தை படித்து பார்த்து பரிசீலனை செய்வேன். தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் ஜனநாயக முறைப்படி சட்டப்படி விதிப்படி நியாயமாக ஒருதலை பட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த முடிவாக இருந்தாலும் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் உட்பட்டபடி அமையும் எனறார்.
மேலும் பேசுகையில் நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் அனைவரும் இரட்டை இலையில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்கள். மற்றபடி அனைத்தும் அவர்களது கட்சியின் உள் விவகாரம்.
துணை தலைவர் பதவி என்ன காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளது என்பதை அவர்களது கடிதத்தின் மூலம் படித்து பார்த்து சட்ட விதி என்ன கூறுகிறது என்று பார்க்க வேண்டும்.
வழக்கறிஞர் உள்ளிட்டவர்களுடன் ஆய்வு செய்து எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கொடுத்த கடிதம் குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு குறித்து மக்கள் சொன்ன கருத்து
“மின் கட்டணத்தை உயர்த்தினால் தான் நிதி வழங்குவதாக மத்திய அரசு கூறவில்லை” - பாஜக தலைவர் அண்ணாமலை

மின் கட்டணத்தை உயர்த்தினால் தான் நிதி வழங்குவதாக மத்திய அரசு கூறவில்லை என்று தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை சேலத்தில் பேசியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்றும், 2 மாதங்களுக்கு 1000 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6,000 வரை பயன்பெறுவர் என்று குறிப்பிட்டிருந்தனர் ஆனால் திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
முதலில் சொத்து வரி உயர்வு, தற்போது மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. திமுக அரசு தனது திறனற்ற செயல்பாடுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறுவதைக் கண்டிக்கிறோம்.
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின்விநியோக பிரிவு திட்டம் (ஆர்.டி.எஸ்.எஸ்.) மூலமாக மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வர ரூ.3.03 லட்சம் கோடி செலவிட உள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியம் கிடைக்காது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த மானியத் தொகையை பெறுவதற்கு மாநில அரசின் மின் பகிர்மான நஷ்டத்தை குறைக்க எடுத்த வழிமுறைகள் என்ன என்பதை விளக்க வேண்டும்.
அதேபோல ஸ்மார்ட் மீட்டரிங் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.19,235 கோடியாகும். புதுப்பிக்கப்பட்ட மின்விநியோக பிரிவு திட்டத்தில் உற்பத்தி செலவு மற்றும் விற்பனை விலை ஆகியவை இரண்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பது மின் பகிர்மான நிறுவனங்கள் தங்களது திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே ஆகும் என்றார்.
மேலும் பேசுகையில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் அடுத்து ஒவ்வொரு மின் வாரிய அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
வரலாறு காணாத சரிவு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80ஐ கடந்தது
“திமுக ஆட்சியில் திரையுலகம் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அழிவு பாதையை நோக்கி செல்கின்றது”-முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் நடைபெறும் பிரச்சினைகளை பார்த்தால் இலங்கையை போல் மாறும் சூழ்நிலை உள்ளது அப்படி மாறும்பட்சத்தில் திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும் என்றார்
அதிமுகவின் கடந்த ஜந்து ஆண்டு ஆட்சியில் சுதந்திரமாக சினிமாதுறை இயங்கி வந்தது. அதைபோல் அதிமுக ஆட்சியில் 2017-ல் இருந்து தொடர்ந்து ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்கள் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் திரைப்படங்கள் வெளியிடும் அளவு திரைப்படத்துறை சர்வதேச அளவில் தரம் உயர்ந்து காணப்பட்டது.
ஆனால் இன்று தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயன் மூவியை சுற்றி காணபடுகிறது. திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார். அவரது கட்டுபாட்டில் தான் சினிமாதுறை உள்ளது என திரையுலகமே இன்று குற்றம்சாட்டுகின்றது.
சினிமா துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் திரைத்துறை அழிவு பாதையை நோக்கி செல்கிறது என கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் மறு உடற்கூராய்வு நிறைவடைந்தது

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு பரிசோதனை இன்று பிற்பகல் 4.15 தொடங்கிய மாலை 7.15 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த உடற் கூராய்வை விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜூலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகிய அடங்கிய குழுவினர் மறு பரிசோதனை செய்தனர். மேலும் இந்த பரிசோதனையானது சிபிசிஐடி எஸ்பி ஜியாஉல் ஹக் மற்றும் ஏடிஎஸ்பி கோமதி முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக மாணவியின் பெற்றோருக்கு உடற் கூராய்வு தொடர்பாக தகவல் அறிக்கை உயிரிழந்த மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டது. அதில் மாணவி பெற்றோர் சார்பில் தந்தை இந்த பரிசோதனையில் பங்கு பெறலாம் என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெற்றோர் தரப்பில் இந்த மறு உடற்கூராய்வு பரிசோதனையில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவின்படிநடந்த இந்த பிரேத பரிசோதனை, வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் மறு உடற்கூராய்வு பரிசோதனை நிறைவடைந்ததை மருத்துவ குழு சார்பில் பள்ளி மாணவி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் எனவும் மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களே உங்களிடம் யாராவது இப்படி சொன்னால்நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள்? சிறந்த பதில்களை தேர்ந்தெடுத்து உங்கள் பெயருடன் வரும் நாட்களில் பதிப்பிப்போம்.
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் உள்ளாடையை கழற்றச் சொன்னதாக எழுந்த புகார்
தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் பிரச்னை தீருமா?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விழுந்த நிகழ்வை உருவ பொம்மை வைத்து ஆய்வு நடத்திய சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி விழுந்ததாக கூறப்படும் இடத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று முதல் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் தனியார் பள்ளியில் மாணவி விழுந்ததாக கூறப்படும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சிபிசிஐடி குழுவினர் ஜியாஉல்ஹக் தலைமையில் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது மாணவி தங்கி இருந்த விடுதியின் அறை மற்றும் அவர் பயன்படுத்திய பகுதிகள், மேலும் அவர் விழுந்ததாக கூறப்படக்கூடிய இடங்களையும் கூர்ந்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாணவியை போல் உருவ பொம்மையை தயார் செய்து அதை மாடியில் இருந்து குதிக்க வைத்து பரிசோதனை செய்தனர். மேலும் மாணவி கீழே விழுந்த இடத்தின் தன்மை, விழுந்த இடத்தின் தூரம் உள்ளிட்டவைகளை பதிவு செய்து கொண்டனர்.
நண்பகல் 12 மணிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர் மூன்று மணி நேரம் பள்ளி வளாகத்தில் இருந்து ஆய்வு பணியை செய்தனர். அதேபோல் மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவ மனையில் உடற்கூராய்வு பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்- இ.பி.எஸ் அறிக்கை
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றத்தை செய்துள்ளதாக தமிழ்நாடு மின் வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வீட்டு வரி, மின் கட்டணம், குடிநீர், கழிவுநீர் கட்டணங்கள் உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நபிகள் பற்றிய சர்ச்சை கருத்து: "நூபுர் ஷர்மாவை ஆகஸ்ட் 10வரை கைது செய்ய வேண்டாம்" - உச்ச நீதிமன்றம்
வந்துகொண்டிருக்கும் செய்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட காவல் எஸ்பி செல்வகுமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்துள்ளார். அந்த மாவட்டத்தின் ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜட்டாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கான புதிய மாற்றல் ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
அதேசமயம், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக இருக்கும் பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக மாறியது.
இந்த நிலையில் வன்முறை ஏற்பட்ட சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் அதன் வளாகத்தை தமிழ்நாடு உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர் எ.வ. வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு: அரசு மருத்துவமனையில் மறு உடல்கூராய்வு தொடங்கியது

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்யும் பணியை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இந்த மறு உடல்கூராய்வு நடந்து வருகிறது.
முன்னதாக, இது தொடர்பான தகவலை மாணவியின் பெற்றோருக்கு தெரிவிக்கும் வகையில் அவருடைய வீட்டில் மருத்துவமனை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜூலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடயவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகிய அடங்கிய குழுவினர் மறு உடற்கூராய்வு பரிசோதனை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரில் போலீசார் குவிப்பு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு இன்று முடியும் பட்சத்தில் அவரது உடல் சொந்த ஊருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரிழந்த மாணவியின் ஊரான வேப்பூரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இன்று மறு உடற்கூராய்வு செய்யப்படும் பட்சத்தில், மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர வாய்ப்பு இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் 2 ஏடிஎஸ்பி 7 டி.எஸ்.பி தலைமையில் 300 போலீசார் வேப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்த தனியார் பள்ளியில் சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி முழுவதும் சேதமாகியுள்ளது.
இந்நிலையில் இன்று பள்ளியில் மாணவி விழுந்த பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சிபிசிஐடி எஸ்.பி ஜியாஉல்ஹக் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை முதல்வரிடம் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலி முகத்திடல் நோக்கி பேரணி
