நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா?

  2. தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?

  3. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.

    • நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்ட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
    • இலங்கையின் 8 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், பல்வேறு இயற்கை சீற்றங்கள் பதிவாகியுள்ளன.
    • ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி, இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
    • வடமாநில மாணவர்களால் கொரோனா தொற்று என்று தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு, உத்தரபிரதேச அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை பிபிசி தமிழின் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  4. விக்ரம் திரைப்படம் - கமல்ஹாசனின் 1986 விக்ரம் எப்படியிருந்தது?

  5. சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் எதிர்ப்பு

  6. இலங்கை முன்னாள் எம்.பி துமிந்த சில்வா கைது - கொலை வழக்கில்

    துமிந்த சில்வா

    பட மூலாதாரம், DUMINDA SILVA'S FACEBOOK

    படக்குறிப்பு, துமிந்த சில்வா

    இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் துமிந்த சில்வா, குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இலங்கையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற கொலைக் குற்றம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை அனுபவித்து வந்த அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

    இது குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரித்து, துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு இடைக்கால தடை விதித்து, அவரை மீண்டும் சிறைக் காவலில் ஒப்படைக்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

    இன்றைய தினம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் துமிந்த சில்வா அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். துமிந்த சில்வா இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பதவி வகிக்கிறார்

  7. விக்ரம் படத்தில் கமலின் துணிச்சலான முயற்சி- சுவாரஸ்ய தகவல்கள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பே, விக்ரம் படத்தின் மூலம் துணிச்சலான முயற்சியை எடுத்த கமல்ஹாசன். இந்த திரைப்படத்தின் கதை வார இதழில் தொடராக வெளி வந்தது.

    அதேநேரத்தில், படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இன்னும் இது போன்ற சுவாரஸ்ய தகவலை அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

  8. மயிலாடுதுறை காவிரியாற்று கரையில் அரிப்பு

    மயிலாடுதுறை காவிரி கரை அரிப்பு

    மயிலாடுதுறை அருகே பாலம் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் கரையில் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் எல்லையை தண்ணீர் சென்றடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் கடந்த 2 நாட்கள் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், திருவாலங்காடு கதவணையில் தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே மூவலூர் என்ற இடத்தில் காவிரி ரெகுலேட்டர் (நீர் ஒழுங்கி) ஆறு மதகுகளுடன் அமைந்துள்ளது.

    இப்பகுதியில், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணி, தற்போது முழுவீச்சில் நடைபெற்றது.

    தண்ணீர் வருவதற்குள் பாலத்தின் அடிப்பகுதி கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்திருந்தார்.

    முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், பாலம் கட்டுமானத்திற்காக ஆற்றின் இடது கரையில் 100 மீட்டர் அளவிற்கு கரை துண்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் கரை துண்டிக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, கரையில் மண் மூட்டைகளை அடுக்கியும், தடுப்பு பலகைகள் அமைத்தும் தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  9. இலங்கை ஜனாதிபதி செயலணி பதவிக்காலம் நீட்டிப்பு

    இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்ட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில், கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதன் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்கள் நீடித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இத்த செயலணியின் இறுதி அறிக்கை 10 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, நேற்று முன்தினம் பிபிசி தமிழிடம் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

    இதேவேளை, இந்த செயலணியிலிருந்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    இலங்கை ஜனாதிபதி செயலகம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி செயலகம்
  10. ’சேத்துமான்’ இயக்குநர் தமிழ்: “பா. ரஞ்சித் தயாரிப்பாளராக சுதந்திரம் கொடுத்தார்”

  11. தமிழ்நாட்டில் கூகுள் மூலம் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

    பட மூலாதாரம், TN DIPR

    மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்தின் மூலம் "ரீடிங் மாரத்தான் " இன்று தொடங்கப்பட்டது.

    வரும் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் " கூகுல் ரீடிங் அலாங்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வழியே எளிய முறையில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்கான துவக்க விழா, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பகவதிபுரம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் மாநிலம் முழுக்க 1.81 லட்ச மையங்கள் மூலம், தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

    குழந்தைகள் படிக்கும்போது நூறு வார்த்தைகள் கொண்ட சிறிய கதை முதல் 400 வார்த்தைகள் கொண்ட பெரிய கதை வரை படிக்க செய்வோம். நான்கு கட்டமாக இதற்கு உரிய பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

    ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறனுக்காக, கதைகளோடு புகைப்படங்களும் இருப்பதால், படிப்பதற்கு அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.'என்றார்.

    ரீடிங் மாரத்தான் தொடக்கம்
  12. இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் - ஆசிய ஹாக்கி கோப்பையில்

    இந்திய ஹாக்கி அணி

    பட மூலாதாரம், Hockey India

    படக்குறிப்பு, இந்திய ஹாக்கி அணி

    ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

    இந்தோனீஷியா தலைநகர் ஜகார்தாவில் ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில் 1-0 என்கிற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரீஸ்வரன், கார்த்திக் ஆகிய இருவர் பங்கேற்றுள்ளனர். நடப்புச் சாம்பியனான இந்தியா சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது.

    இதில், 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. சூப்பர் 4 சுற்றின் முடிவில் மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால், கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் மலேசியா, தென் கொரியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், ஜப்பானை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தோனீசியா அணியை 16-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

    இந்திய ஹாக்கி அணி

    பட மூலாதாரம், Hockey India

    படக்குறிப்பு, இந்திய ஹாக்கி அணி
  13. என்னை பிரதமராக நினைத்ததில்லை - மோதி

    'நான் ஒரு முறை கூட என்னை பிரதமராக நினைத்ததில்லை.' என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோதி இவ்வாறு பேசியுள்ளார்.

    அவரது பேச்சில், ' எனது வாழ்வில் எல்லாமுமாக இருக்கும் 130 கோடி மக்களுக்கு நான் பிரதம சேவகன் மட்டுமே.' என்றார்.

    இந்திய பிரதமர் மோதி
  14. இலங்கையில் 8 மாவட்டங்களில் இயற்கை சீற்றம் - 12, 326 பேர் பாதிப்பு

    இலங்கை இயற்கை சீற்றம்

    பட மூலாதாரம், Sri lanka Navy

    இலங்கையின் 8 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், பல்வேறு இயற்கை சீற்றங்கள் பதிவாகியுள்ளன.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தினால் 2, 672 குடும்பங்களைச் சேர்ந்த 12, 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இது வரை 66 சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இன்ரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், 5 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 57 முகாம்களில் 236 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

    மண்சரிவு, வெள்ளப் பெருக்கு, மற்றும் கடும் காற்று உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 2448 குடும்பங்களைச் சேர்ந்த 11477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

    கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறைசேரி ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்களின் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திறைசேரிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

    இலங்கை இயற்கை சீற்றம்

    பட மூலாதாரம், Sri Lanka Navy

  15. இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறதா? ஜிடிபி வளர்ச்சி பற்றி ஓர் அலசல்

  16. கத்தார் கிரிக்கெட் அணி தலைவராக இலங்கை கண்டி வீரர் தேர்வு

    கிரிக்கெட் வீரர் றிஸ்லான்

    பட மூலாதாரம், Rizlan

    கத்தார் கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த றிஸ்லான் இக்பார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் அந்த அணியின் உப தலைவராக இருந்தார்.

    இலங்கையின் கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த றிஸ்லான்(37). கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரியின் ((St. Anthony’s College) முன்னாள் மாணவர். இவர் பாடசாலை கிரிக்கெட் அணி, கண்டி மாவட்ட அணி, மத்திய மாகாண அணிக்காவும் விளையாடியுள்ளார். 2003-04 காலப்பகுதியில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கையின் தேசிய அணியிலும் விளையாடியுள்ளார்.

    தற்போது, கத்தாரில் உள்ள றிஸ்லானுடன் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது, 'தொழில் வாய்ப்புப் பெற்று 2006ஆம் ஆண்டு கத்தார் சென்று, நண்பர் ஒருவரின் உதவியுடன் பிரபல உள்ளுர் கிரிக்கெட் அணியொன்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றதாக.' கூறினார்.

    மேலும், 'கத்தார் தேசிய அணியில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் விளையாடி வருவதாகவும், 2016ஆம் ஆண்டு அணியின் உப தலைவராக தான் நியமிக்கப்பட்டதாகவும்.' தெரிவித்தார்.

    மொத்தம் 18 வீரர்களைக் கொண்டுள்ள கத்தார் கிரிக்கெட் அணியில் 06 இலங்கையர்களும், 04 இந்தியர்களும், 08 பாகிஸ்தானியர்களும் உள்ளனர்.

  17. 200 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடக்கும் ஒரு ராஜஸ்தான் கிராமத்தின் கதை

  18. திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் - பாஜக எதிர்ப்பு

    திருப்பூரில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு `முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் - மத்திய பேருந்து நிலையம்` எனப் பெயர் வைக்க திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் கூறுகையில், ''ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான நிதி மத்திய அரசுதான் வழங்குகிறது. அதற்கு கருணாநிதி அவர்களின் பெயரை வைப்பது கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் அவர்கள் தங்களின் சொந்த பணத்தில் கட்டி வேண்டுமானால் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என்று பெயர் வைக்க உரிமை உண்டு. மாநிலத்தில் எங்கெல்லாம் பணிகள் முடிந்து திறக்கும் தருவாயில் அரசாங்க சொத்துகள் உள்ளனவோ அங்கெல்லாம் தங்கள் குடும்ப பெயரை வைக்க துடிக்கின்ற தமிழக அரசாங்கம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை பாரதிய ஜனதா கட்சி கண்டிக்கிறது,'' என்றார்.

    திருப்பூர் மாநகராட்சியின் தீர்மானத்திற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி வருகிற ஜூன் 6-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறது.

  19. சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

    நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2015ம் ஆண்டு முடிந்து விட்டது. இந்நிலையில், தற்போது இருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வரும் 8ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சோனியா காந்தி செல்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. அன்புமணி, பொன்னையன் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில்

    பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை

    பட மூலாதாரம், K.Annamalai

    படக்குறிப்பு, கே.அண்ணாமலை

    பாரதிய ஜனதா கட்சி குறித்து பாமக தலைவர் அன்புமணி, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ள கருத்திற்கு அண்ணாமலை இன்று பதில் அளித்துள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத சாதனையை, பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சி செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், வரும் 15ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.' என்றார்.

    தொடர்ந்து பாஜக குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, 'ஒவ்வொருவரும் தங்கள் கட்சி முதன்மை இடத்திற்கு வர வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். அதற்காக கருத்து தெரிவிக்கலாம்.

    ஒரு தலைவர் கூட சொன்னார் (பாமக தலைவர் அன்புமணி) நாங்க தான் பெரிய கட்சி, பாஜக சின்ன கட்சி என்று, அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய கட்சியாக இருந்திருக்கலாம். ஆனால், மக்களின் அன்பைப் பெற்று, பாரதிய ஜனதாக் கட்சி தமிழ்நாட்டில் முதன்மைக் கட்சியாக வரும்.

    இது போன்ற விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது, பாஜக மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருவதைக் காட்டுகிறது. தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் 3வது பெரிய கட்சி யார், என்பது தெளிவாகியுள்ளது.

    வரும் 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 25 எம்.பிக்கள் கிடைப்பார்கள். இந்த தேர்தலில் பெரும் திரளாக பாஜகவிற்கு ஆதரவு கிடைக்கும்.'' என்றார்.

    சசிகலா பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ''அது அவரது தனிப்பட்ட கருத்து. யார் வேண்டுமானாலும் பாஜகவிற்கு வரலாம். ஆனால், குறிப்பிட்ட நபர்களை சேர்ப்பது குறித்து, மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.