இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.
- நேபாளத்தில் காணாமல் போன விமானம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணித்தனர். இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- தருமபுரி மாவட்டத்தில் வீடு வீடாகச்சென்று, கர்ப்பிணியின் கருவில் இருப்பது ஆணா,பெண்ணா? என கண்டறிந்து, சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் உள்ளிட்ட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
- கர்நாடகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயிகள் சங்க (பி.கே.யு) தலைவர் ராகேஷ் திகையத் மீது மை வீசப்பட்டது.
- மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) 2021 குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு இன்று (30) முற்பகல் நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிவைத்தார்.
- இந்தியாவில் 8 ஆண்டுகளில் அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.







