மத்தியபிரதேச உள்ளாட்சித் தேர்தல்: ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

மத்தியப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. நேரலைப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.
    • மத்தியப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    • மாநில மின் உற்பத்திக் கழகங்கள் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று இந்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் பாஸ்கரராமன் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.
    • இலங்கையில் முள்ளிவாய்க்கால் போர் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இலங்கை நெருக்கடியை பயன்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு குழு அழுத்தம் தர முயற்சிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி

  2. இந்திய ஹாக்கியில் தமிழ்நாட்டு வீரர்கள் இருவர் - ஏழ்மையை வென்ற திறமை

    இந்திய ஹாக்கி வீரர்கள் கார்திக், மாரீஸ்வரன்

    பட மூலாதாரம், TN Hockey Association

    படக்குறிப்பு, இந்திய ஹாக்கி வீரர்கள் கார்திக், மாரீஸ்வரன்

    திறமையும் முயற்சியும் இருந்தால் போதும் நாம் விரும்பிய உயரத்தை தொடலாம், என்பதற்கு கண்முன் உதாரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர், விளையாட்டுத்துறையில் கவனம் ஈர்த்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தீப்பெட்டித் தொழிற்சாலை தொழிலாளி மகன் மாரீஸ்வரன். அரியலூர் அரசு கல்லூரி இரவு காவலாளி மகன் கார்த்திக் இருவரும் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்கி, பயிற்சி பெற்றவர்கள் இருவர் குறித்த காணொளியைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

  3. பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?

  4. பேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்

  5. முதலமைச்சரை சந்தித்த பேரறிவாளன்

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    இந்நிலையில் பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. இந்திய நிதியமைச்சருடன் தமிழ்நாடு எம்.பிக்கள் சந்திப்பு - நூல் விலையை குறைக்க கோரிக்கை

    தமிழ்நாடு எம்.பிக்கள் குழு

    பட மூலாதாரம், Kanimozhi/Twitter

    தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் கனிமொழி, ஜோதிமணி, சண்முகம், சின்ராஜ், பார்த்திபன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர்.

    அப்போது, பருத்தி நூலின் கடும் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அளித்தனர்.

    தொடர்ந்து, ' நூல், பஞ்சுவிலை உயர்வால் கரூர், திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள், ஜவுளித் தொழில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், வேலையிழப்பு குறித்து விளக்கி, தமிழ்நாடு முதலமைச்சர் இதுதொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிட்டோம். நிதியயமைச்சர் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.' என்று எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.

  7. பேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்

  8. பேரறிவாளன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு

    தமிழ்நாடு முதலமைச்சரை பேரறிவாளன், அவரது தாய் அற்புதம் அம்மாள் ஆகியோர் சந்தித்தனர்.

    பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர். முதலமைச்சருக்கு பேரறிவாளன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக பேரறிவாளன் விடுதலை குறித்து முதலமைச்சரின் அறிக்கையில், ''30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும். ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு எதையும் வெல்லும் திறன் உண்டு எனத் தாய்மையின் இலக்கணமாக நின்றுள்ளார் அற்புதம் அம்மாள் என்னும் அயராத போராளி.'' என்று குறிப்பிட்டிருந்தார்

    பேரறிவாளன்
    படக்குறிப்பு, பேரறிவாளன்
  9. பேரறிவாளன் விடுதலை: பாஜக ஏற்பு - காங்கிரஸ் எதிர்ப்பு

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

    இதை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், 'உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.' என்று தெரிவித்துள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சி இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழ்நாடு பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்!' என்றார் தெரிவித்துள்ளார்.

    அதேநேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் கூறுகையில், "31 ஆண்டுகால போராட்டம் உச்ச நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்துள்ளது. யாருடைய கருணையின் அடிப்படையில் அல்லாமல், சட்டபூர்வமாக அவர்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கருத்தாக இருந்தது. இப்போது, சட்டபூர்வமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸுக்கு இதில் மாற்று கருத்து இல்லை" என தெரிவித்தார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. பேரறிவாளன் விடுதலை: ஒரு நீண்ட போராட்டத்தின் கதை

  11. பாஜக பிரமுகர் எச்.ராஜா கைது - போலீசாருடன் வாக்குவாதம்

    எச்.ராஜா
    படக்குறிப்பு, எச்.ராஜா

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் கைது செய்யப்பட்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு இடும்பன்கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி உரிய அனுமதி பெறவில்லை, மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் இல்லை, போதிய இடவசதி இல்லை, பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கப்படவில்லை என்பதால் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.

    மேலும், பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு(30)2 அமலில் இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற எச். ராஜாவை சத்திரப்பட்டியில் போலீசார் தடுத்தனர். அப்போது, போலீசாருடன் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாக பேசியுள்ளார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் இடும்பன்குளம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு சென்ற தன்னை திண்டுக்கல் எஸ்.பி. காரணமின்றி கைது செய்துள்ளதாக, எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. இலங்கை நெருக்கடி: தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இதன் முதல்கட்டமாக இன்று கப்பலில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. இலங்கை நெருக்கடி: உள்நாட்டு, வெளிநாட்டு குழு அழுத்தம் தர முயற்சி- கோட்டாபய ராஜபக்ஷ

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய படைவீரர் தின செய்தியை இன்று வெளியிட்டுள்ளார்.

    இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்புவில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள தேசிய படைவீரர் தின செய்தியில், 'இலங்கை பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் தனிநபர்களும் தேசிய பாதுகாப்பில் அலுத்தங்களை பிரயோகிக்க முயற்சிக்கின்றனர். இதில், சந்தேகமில்லை.

    நாம் அதனை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். அப்போதுதான் துணிச்சலான போர் வீரனின் நாட்டிற்கான அர்ப்பணிப்பு பாதுகாப்படும். தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு, சுதந்திர நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமடைந்த வீர வீராங்கனைகளுக்கு எனது கெளரவமான மரியாதையை செலுத்துகிறேன்'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கோட்டாபய ராஜபக்ஷ படைவீரர் தின செய்தி

    பட மூலாதாரம், Sri lanka Govt.

  14. பேரறிவாளன் விடுதலை: எந்த அடிப்படையில் தீர்ப்பு ? - வழக்குரைஞரின் பிரத்யேக பேட்டி

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் 142வது ஷரத்தின் படி உச்சநீதிமன்றத்திற்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார்.

    ஏழு பேரில் ஒருவர் தற்போது விடுதலை செய்யப்படுகிறார். மற்ற 6 பேரின் விடுதலை எப்போது ?

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேரறிவாளன் வழக்குரைஞர் சே.பிரபு பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலை, இந்த காணொளியில் பார்க்கலாம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  15. பேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்

  16. மத்தியபிரதேச உள்ளாட்சி தேர்தல்: ஒபிசி ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

    மத்தியப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ஏ.எஸ்.ஓகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்குமாறு மத்தியப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், 3 பேர் கொண்ட ஓபிசி ஆணைய அறிக்கையின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது.

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றார். மேலும், காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மீது குற்றம்சாட்டிய, அவர் 'மாநில மக்களுக்கு உண்மை தெரியும்' என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  18. மாநில மின் உற்பத்திக் கழகங்கள் நிலக்கரி இறக்குமதி தொடங்கவேண்டும்: மின்துறை அமைச்சர்

    நிலக்கரி

    பட மூலாதாரம், Getty Images

    மாநில மின் உற்பத்திக் கழகங்களை உடனடியாக நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டும் என்று இந்திய மின்சாரம், புது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மழைக் கால நிலக்கரித் தேவையை எதிர்கொள்ள இந்த நடவடிக்கையை எடுக்கச் சொல்லி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில மின் உற்பத்திக் கழகங்கள் தங்கள் நிலக்கரித் தேவையில் 10 சதவீதத்தை இறக்குமதி செய்துகொள்ளவேண்டும் என்று முன்னதாக மின்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. மே 31ம் தேதிக்குள் ஆர்டர்களை அளித்து, அதில் 50 சதவீதம் ஜுன் 30ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்யும்படி மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன. மீதி 40 சதவீதம் நிலக்கரி ஆர்டர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளும், 10 சதவீதம் அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும் டெலிவரி ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது அமைச்சகம். ஹரியாணா, உத்தரப்பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தனித்தனியாக இது தொடர்பாக கடிதம் எழுதிய இந்திய மின் துறை அமைச்சர், இந்த மாநிலங்களில் நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டர் நடைமுறைகள் இந்த மாநிலங்களில் தொடங்கப்படவில்லை அல்லது முடிக்கப்படவில்லை என்று கவலை தெரிவித்திருந்தார்.

  19. பேரறிவாளன் வீட்டில் கொண்டாட்டம்: "இனிதான் கொஞ்சம் காற்றை நான் சுவாசிக்க வேண்டும்"

  20. பேரறிவாளன்: உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தில் விடுதலை