You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ - ரணில் விக்ரமசிங்க திடீர் சந்திப்பு
இலங்கை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் எம்.பி. போலீசார் உள்ளிட்ட 9 பேர் இறந்துள்ளனர் என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்புவிற்கு ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?
கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுக்குப் பின்னால் ரணில் தந்த யோசனைகளா? என்ன திட்டம்?
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான முக்கிய நிகழ்வுகள்.
- ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- இலங்கை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் எம்.பி. போலீசார் உள்ளிட்ட 9 பேர் இறந்துள்ளனர் என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
- ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வரும் செய்திகளுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் (தூதரகம்) மறுப்பு தெரிவித்துள்ளது.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேசினார்.
- இந்திய உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ரஷ்யா ராணுவ வீரர்கள் இதுவரை 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி உரையிலிருந்து சில முக்கிய தகவல்கள்
இன்று இரவு சுமார் 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் கோட்டாபய ராஜபக்ஷ.
அவரின் உரையிலிருந்து சில முக்கிய தகவல்கள்:
- வன்முறை சம்பவங்கள் நடந்தேறிய சந்தர்ப்பத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதி, போலீஸ் மாஅதிபர், புலனாய்வு பிரதானி உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகளை தொடர்புப்படுத்திக் கொண்டு, நான் நாட்டை அமைதியாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.
- நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாக காணப்படுகின்றது.
- அதனால், அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முப்படைகளுக்கும், போலீஸாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இந்த சம்பவத்திற்கு தொடர்புப்பட்ட, திட்டமிட்ட, ஆணை வழங்கிய மற்றும் பிரசாரம் செய்த அனைத்து தரப்பிற்கும் எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அதனால், இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடாது, அதனை தவிர்த்துக்கொள்ளுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
- நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நான் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றேன்.
- தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ள அரச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும், புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
- நான் இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டு, அதேபோன்று, நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
- அதன்பின்னர், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் விதத்திலான 19வது திருத்தத்தை அமல்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன்.
ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை வீதிகளில் ராணுவ கவச வாகனங்கள்
மீண்டும் வீதிகளில் ராணுவ கவச வாகனங்கள்; கொழும்பில் என்னதான் நடக்கிறது?
அமைதியாகத் தொடங்கிய போராட்டம் இலங்கை அரசையே உலுக்கியது எப்படி?
இலங்கை நெருக்கடி : கோட்டாய ராஜபக்ஷ - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேசி வருகிறார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அமைதியற்ற சூழல் தொடர்கிறது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களில் 9 பேர் வரை இறந்துள்ளனர்.
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் கொழும்புவில் ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசி வருகிறார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு மக்களுக்கு விஷேட உரையாற்ற திட்டமிட்டுள்ளார்
'திருமண உறவில் பாலியல் வன்கொடுமை' - மாறுபட்ட தீர்ப்பு
'திருமண பாலியல் வன்கொடுமையை' சட்டவிரோதமாக்குவது குறித்து இன்று நீதிபதிகள் இருவரும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி ராஜிவ் ஷக்தேர் மற்றும் நீதிபதி ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில் நீதிபதி ராஜிவ் ஷக்தேர், மனைவியின் அனுமதியில்லாமல் கணவர் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது சட்டப்பிரிவு 14-ஐ மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தார்.
நீதிபதி ஹரி ஷங்கர், தான் நீதிபதி ராஜிவ் ஷக்தேருடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிவித்தார்.
அதாவது திருமண உறவில் பாலியல் வன்புணர்வு என்பது சட்டவிரோதமாகாது என்ற சட்டத்தை ரத்து செய்ய ஒரு நீதிபதி ஒப்புக் கொண்ட போதிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் பாலியல் உறவை வைத்து கொள்வது பாலியல் வன்புணர்வாகாது என்று கூறும் ஐபிசியின் சட்டப்பிரிவு 375 விலக்கை மாற்ற மற்றொரு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே இது தொடர்பான மேற்கொண்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும்.
இலங்கை நெருக்கடிக்கு தீர்வு: மாணவர் ஒன்றியத்தின் முன்மொழிவுகள்
இலங்கையில் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகள்' எனும் தலைப்பில் 13 முன்மொழிவுகளைஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வில், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பல முக்கியஸதர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இதில் உள்ளடக்கப்பட வேண்டுமென அங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தினார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இல்லாத எதிர்காலம் இலங்கைக்கு கிடையாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்
யுத்த நாயகன் மஹிந்த: ராஜபக்ஷேக்கள் வளர்ந்த கதை
தேசியத் தலைவராக உருவெடுத்த மஹிந்த - ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை
பழங்குடி சிறுவனை தீயில் தள்ளியதாக கூறப்படும் விவகாரம்: நடந்தது என்ன? – கள நிலவரம்
பேரறிவாளன் விடுதலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - இதுவரை நடந்தது என்ன ?
பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம் - காரணம் என்ன?
இலங்கையில் அலுவல்பூர்வ ராணுவ ஆட்சி வரும் சூழ்நிலை இருக்கிறதா?
கொழும்பு போராட்டம் வன்முறையாக மாறிய தருணம் - பிபிசி செய்தியாளர்கள் கண்டவை என்ன?
பேரறிவாளன் விடுதலை வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது
இந்திய உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
கடந்த 4ம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஆளுநரையும் மத்திய அரசையும் நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பிய ஆவணங்களை சமர்ப்பிக்க கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான ஆவணங்களை வரும் திங்கள் கிழமைக்குள் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. .
இலங்கை வரலாறு: மஹிந்த பிரதமரான 'அரசியல்' - ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை